அண்மை செய்தி தாயகச் செய்தி 

உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் இன்று  (04)  பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.இந்த பரிசோதனைகளின் போது, நுகர்விற்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகள் கண்டறியப்பட்டதுடன், அவை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அவ்விடத்திலேயே அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும், விற்பனையாளர்களுக்கு சுகாதார விதிமுறைகள், உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுத்தமான சூழல் பராமரிப்பு குறித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்  பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்டன.

பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது  முக்கியப் பொறுப்பாக இருப்பதால்  இத்தகைய பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பதை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த பரிசோதனைகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹிலா இஸ்ஸதீன்  வழிகாட்டலின்பேரில்  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் முன்னோடித் திட்டமிடல் மற்றும் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அன்மைச் செய்தி

Leave a Comment