இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்த ஆண்டில் இதுவரை 1,654 ஆபத்தான வாகன விபத்துகள் – 1,749 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் நேற்று (20) வரை நாட்டில் 1,654 ஆபத்தான வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். குறித்த விபத்துகளில் 1,749 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாரிய விபத்துகளில் 4,556 பேரும், சிறிய விபத்துகளில் 7,295 பேரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்துகளால் 3,232 சொத்து சேதங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீதி விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 576 பேர் பாதசாரிகள், 617 பேர் மோட்டார் சைக்கிள் சாரதிகள், 122 பேர் பின்னிருக்கை பயணிகள், 119 பேர் மிதிவண்டி சாரதிகள், 139 பேர் சாரதிகள் மற்றும் 173 பேர் பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அரிசி இறக்குமதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 2026ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசுக்குத்  தேவையான 7 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் நேற்று  பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 76 ஆண்டு கால விவசாயிகளின் சோகத்தைச் சுபீட்சமான நிலைக்கு மாற்றித் தருவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் ஜீவனோபாயத்தைப் பொருளாதாரப் படுகொலையாக மாற்றியுள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார். அரசின் அமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட தரவுகளின்படி, சிவப்பு நாடு மற்றும் வெள்ளை நாடு போன்றவற்றுக்கான உற்பத்திச் செலவைக் கணக்கிடும் போது, விவசாயிகளுக்குக் கிடைக்கும் குறைந்த இலாபத்தைக் கொண்டு எவ்வாறு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் தொடரும் வறட்சி: கடும் நீர் நெருக்கடியில் 25,563 குடும்பங்கள்!

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி நிலைமையால் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 25,563 குடும்பங்களின் 81,605 பேர் கடுமையான நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் தெரிவித்துள்ளது. அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் வறட்சியான வானிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ நிகழ்வுகளால் உருவாகக்கூடிய வறட்சி நிலைமைகளை எதிர்கொள்வதற்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடையின்றி நீர் வழங்குவதற்கும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பாதுகாப்பு அமைச்சினால் கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதி சிறப்புச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்காக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், போத்தல் குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்காக ஒருவருக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் நீரின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

நாடு திரும்பும் அகதிகளின் பிரச்சினைகளை ஒரே பொறிமுறையில் தீர்க்க வேண்டும்

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளின் பிரச்சினைகளை ஒரே பொறிமுறையில் நீக்குவதற்கு வடக்கு, கிழக்கில் ‘ஒருங்கிணைந்த மீள் வருகை மற்றும் மறுவாழ்வு அலகு’ ஒன்றை நிறுவ வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2 இல் விசேட கூற்றொன்றை முன்வைத்தே அவர், இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; இந்தியாவிலுள்ள எமது மக்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது சனத்தொகை வீதம் குறைவடைந்து வருகிறது.இந்நிலையில் அவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்தால் எமது சனத்தொகை விகிதாசாரம் அதிகரிக்கும், பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் அதிகரிக்கும்.இவ்வாறு வரும் பட்சத்தில்,இராணுவத்தின் வசமுள்ள இவர்களின் காணிகளையும் விடுவிக்க முடியும்.இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப விரும்புவது தொடர்பாக, குறிப்பாக பாதுகாப்பு அனுமதி, வீடமைப்பு,காணி மற்றும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மொனராகலையில் அதிகாலை பயங்கரம்; கோர விபத்தில் ஐவர் பலி! மூவர் படுகாயம்

மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட  ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் கும்புக்கன, களு பாலம் பகுதியில், வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியொன்று எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின்போது உழவு இயந்திரத்தில் 10 பேர் பயணித்த நிலையில், அவர்களில் எட்டுப் பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த ஏனைய மூவரும் மொனராகலை வைத்தியசாலையில் தொடர்ந்து…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை மக்களுக்கு காவல்துறை விடுத்த முக்கிய அறிவிப்பு

பத்தரமுல்ல, இசுஹுருபாய கட்டடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள காவல்துறை. தலைமையகத்தினால் வழங்கப்படும் காவல்துறை.  அனுமதி அறிக்கை தரவு அமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அனுமதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், அறிக்கைகளை கோருதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் ஆகிய நடவடிக்கைகள் தரவு அமைப்பொன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. குறித்த தரவு அமைப்பு நேற்று நண்பகல் முதல் செயலிழந்துள்ளதாக  காவல்துறை. தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், தரவு அமைப்பை மீளச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த தரவு அமைப்பு மீள செயல்படும் வரை காவல்துறை. அனுமதி அறிக்கைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தரவு அமைப்பு மீளவும் இயங்கியவதுடன் பொலிஸ் அனுமதி அறிக்கைகளுக்கான விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என பொ

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே குறிப்பிட்டுள்ளார். இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளையும் செப்டெம்பர் மூன்றாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பஸிலுக்கு பிடியாணை மேலும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நீடிப்பு!

முறையற்ற வகையில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மாத்தறையில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கினார் எனக் கூறப்படும் வழக்கில், தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையைப் பறிமுதல் செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ்  நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க முன்னிலையில் நேற்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கில் மூன்றாவது பிரதிவாதியான பஸில் ராஜபக்ஷ, நீதிமன்றம் ஏற்கத்தக்க மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்காமல் தொடர்ந்து மன்றில் ஆஜராகாமல் இருந்து வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரது பிணைக்குப் பிணையாளர்களாகக் கையொப்பமிட்ட மூவருக்கும் அபராதம் விதித்த நீதிவான், அதனைச் செலுத்தத் தவறினால் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டார். அத்துடன், பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை எதிர்வரும் ஒக்டோபர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் இருந்து பணப் பரிமாற்றம் செய்வது தொடர்பில் கடுமையாகும் சட்டம்

இலங்கையின் 2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை கொள்கை ரீதியான அனுமதியை வழங்கியுள்ளது அதற்கமைய, இலங்கையில் இருந்து அங்கீகரிக்கப்படாத முறையில் பணப் பரிமாற்றம் செய்வது குற்றவியல் குற்றமாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட்ட இந்த திருத்தத்தின் கீழ், பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முற்பணமாக வெளிநாடுகளுக்குப் பணத்தை அனுப்பிவிட்டு, நியாயமான காலப்பகுதிக்குள் அதற்கேற்ற பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அதனை செய்யத் தவறும் ஒருவரின் பரிவர்த்தனையானது, அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுச் செலாவணிப் பரிமாற்றமாகக் கருதப்படலாம். தற்போதைய சட்டத்திற்கமைய, அங்கீகரிக்கப்படாத முறையிலான பண அனுப்பீட்டின் பெறுமதிக்குச் சமமான நிதிக் தண்டப்பணத்தை இலங்கை மத்திய வங்கியால் இலங்கை ரூபாயில்ல் விதிக்க முடியும். எனினும் அவ்வாறான பரிவர்த்தனைகள் தற்போது வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் குற்றவியல் குற்றங்களாக வகைப்படுத்தப்படவில்லை. இதனால் குற்றவியல் வழக்குத் தொடர்வதற்கான சட்ட அடிப்படையானது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தமிழீழ விடுதலை புலிகள் பயிற்சி முகாம் தொடர்பான போலியான தகவல்களை சந்தேகநபர் கைது

தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) பயிற்சி முகாம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத மற்றும் போலியான தகவல்களை சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.   சமூக வலைத்தளம் வாயிலாக காணொளி ஒன்றை வெளியிட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் LTTE பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களைப் பரப்பியமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெல்லன்வில, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார். சந்தேகநபரால் பரப்பப்பட்ட அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை அல்லது அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். சந்தேகநபர் இன்று கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கை…

மேலும் படிக்க