தடைசெய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து
அரிசி அல்லது நெல்லை கால்நடைத் தீவன உற்பத்திக்காகப் பயன்படுத்துவதைத் தடைசெய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் இரத்து செய்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த மேற்படி வர்த்தமானியை இரத்து செய்வதாக குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம், அரிசி அல்லது நெல்லை கால்நடைத் தீவன உற்பத்திக்காக நேரடியாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு ஏதேனும் வகையில் கால்நடைத் தீவன உற்பத்திக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கோ, விற்பனை செய்வதற்கோ, விற்பனைக்காக காட்சிப்படுத்துவதற்கோ, களஞ்சியப்படுத்துவதற்கோ, விநியோகிப்பதற்கோ அல்லது கொள்வனவு செய்வதற்கோ மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேற்படி நடைமுறை கடந்த ஜூன் 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

