இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயம் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கைகள், பயிற்சித் திட்டங்கள், பிராந்திய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த VN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த எயார்பஸ் A-320 ரக விமானம் நேற்று (16) இரவு 11.02 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதற்கு பாரம்பரிய நீர் தாரை மரியாதை செலுத்தப்பட்டு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த முதலாவது விமானப் பயணத்தின் மூலம் 164 பயணிகள் வருகை தந்திருந்தனர். அத்துடன் அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். இந்த நேரடி விமான சேவையின் கீழ் வாரத்தில் 03 நாட்கள், குறிப்பாக ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் கட்டுநாயக்கவிற்கும் வியட்நாமிற்கும் இடையில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஊடகத் துறைக்கான உப துறைசார் மன்றத்தை நிறுவும் நிகழ்ச்சித் திட்டம்

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட துறைசார் மன்றத்துடன் இணைந்து, ஊடகத் துறைக்கான உப துறைசார் மன்றத்தை நிறுவுதல் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் கொழும்பில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சித்திட்டம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அரச சேவை மறுசீரமைப்பு மற்றும் திட்டமிடல் பிரிவின் மேலதிக செயலாளர் சாந்தி வீரசிங்க உள்ளிட்ட அப்பிரிவின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அனுசரணையுடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. துறைசார் மன்றங்கள் அமைக்கப்படும் விதங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அரச அதிகாரிகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் சாந்த வீரசிங்க, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி தீபா லியனகே, தபால் மாஅதிபர் ருவன் சத்குமார, அரச…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

1093 வெளிநாட்டவர்களை நாடுகடத்த தீர்மானம்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடைய 1,093 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் நாடுகடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ. வுட்லர் இதனைத் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற 26 சம்பவங்கள் தொடர்பில் 573 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2025ஆம் ஆண்டு இடம்பெற்ற இரண்டு சம்பவங்களில் மேலும் 26 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 24 சுற்றிவளைப்புகளின் மூலம் 1,093 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்கு அரசின் அறிவிப்பு

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) உதவியுடன் மீண்டும் தாயகம் திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான சிறப்பு ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக குறித்த நபர்களின் இலங்கை அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, அரச புலனாய்வுச் சேவையின் ஒப்புதல் அனுமதி பெறப்பட்ட பின்னர் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது அங்கீகரிக்கப்பட்ட துறைமுகம் ஊடான பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்கு சென்றவர்கள், தங்களுடன் தொடர்புடைய கொலை, தேசத்துரோகம் உள்ளிட்ட பாரிய குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இ.போ.ச பஸ் விபத்து.

15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இ.போ.ச பஸ் விபத்து. சாரதிக்கு படுகாயம்; பயனிகளுக்கு பேரும்/சிறு காயம். மொனராகலையில் சம்பவம். மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று, புத்தள – மஹகொடய பகுதியில் இன்று (11) அதிகாலை 3.55 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. ​இவ்விபத்தில் படுகாயமடைந்த பஸ்ஸின் சாரதி சிகிச்சைக்காக மொனராகலை போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவிலும், ஏனைய பயணிகள் சிறு, பெரு காயங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், அவர்களும் மொனராகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு மற்றும் வேகமே காரணம் என தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் புத்தள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருளுக்கான 50 ரூபா வரியை நீக்குமாறு விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம் வழங்க முடியும் என, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்ததாவது; ”பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டம் தற்போது முழுமையாக ஈடுசெய்யப்பட்டுள்ளதால், 50 ரூபா வரியை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதேபோன்று தற்போது நடைமுறையில் உள்ள   கிவ்.ஆர். (QR) முறையும், எரிபொருள் விநியோகத்திற்கான வரம்புகளும் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதால் அவற்றையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், ”எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத பெறுமதி சேர் வரி மற்றும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான சேவை வழங்கியமைக்கான சேவை கண்டனம் 3 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால்,  தாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

வடக்கு, கிழக்கு எம்.பிக்களுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்ல நேரடி தலையீடுகளை மேற்கொள்வதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை  சந்தித்து கலந்துரையாடிய போதே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இவ்வாறு உறுதியளித்துள்ளார். இச்சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காண்பதே  இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தேவையான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாக சஜித் பிரேமதாச இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், அவற்றுக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக எதிர்க்கட்சித்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை?

முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபையில் ஆராய்வு பிணை வழங்கும் நடைமுறைச் சட்டத் திருத்தங்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது தனிப்பட்ட  தொடர்புகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பிற்கே பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன்,  இந்த நிலைமை தொடர்ந்தும் மோசமடைந்து வருவதைக் கருத்திற்கொண்டே போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டது.தேசிய செயற்பாட்டு சபை  நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடியபோதே  இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் வரம்பற்ற செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள குற்றச்செயல் சூழல், தற்போது தேசிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை களுக்கு இடையூறு

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் கோளாறு காரணமாக இன்று (11) முற்பகலில் கடவுச்சீட்டு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பில் வினவியபோது, குறித்த அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்

மேலும் படிக்க