22ஆவது திருத்தச் சட்டமூலத்தை திரும்பப் பெறப்போவதில்லை ஜனாதிபதி
ஊழல்வாதிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதன் மூலமே கறுப்பு ராஜ்யத்தைத் தகர்க்க முடியுமெனவும் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லையெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாம் எடுக்கும் அனைத்துத் தீர்மானங்களும் மக்களுக்காகவே எடுக்கப்படுவதால் எந்தவொரு தீர்மானத்தையும் நாம் திரும்பப் பெறப்போவதில்லை என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். புலத்சிங்ஹல பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் பேரணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தீர்ப்பு கிடைத்தவுடன், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். நாம் சட்டத்திருத்தங்களை உருவாக்கியுள்ளோம். அதற்காகத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளோம். நாம் எவ்வித பயமுமின்றி முன்னோக்கிச் செல்வோம். நாம் முன்னோக்கிச் செல்லும்போது,…
மேலும் படிக்க