இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் களிலிருந்து 463 கிலோ ஐஸ் மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களிலிருந்து நேற்று 800 கோடி ரூபா பெறுமதியான ஒரு தொகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப் பொருள் தொடர்பில், தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேற்படி கொள்கலன்களில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 463 கிலோ ஐஸ் ரக போதைப் பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்திருந்த இரகசிய தகவலையடுத்து நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொண்டுள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள், இது தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, குறித்த கொள்கலனில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொள்கலனில், துவாய்களால் சுற்றப்பட்ட நிலையில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டு இந்த போதைப் பொருள் நாட்டுக்குக்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கடும் வரட்சியால் ஏழு மாவட்டங்கள் பாதிப்பு;

நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக 07 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 82,000 பேர், குடிநீரைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.நாட்டின் 24 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேர், குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம், மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, அந்நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதனைத் தவிர அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்ட மக்களும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

துப்பாக்கி லைசன்ஸ்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்

துப்பாக்கி உள்ளிட்ட சுடுபடைக்கலன்களுக்கான 2027 ஆம் ஆண்டுக்கான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கும் செயற்பாடுகள் இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கிணங்க இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய கால அவகாசத்துக்குள் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கத் தவறும் அனைத்துத் துப்பாக்கி உரிமையாளர்களும் துப்பாக்கிச் சட்டக் கோவையின் 22 வது பிரிவின் விதிகளுக்கு அமைவாக, செல்லுபடியாகும் அனுமதியின்றித் துப்பாக்கி வைத்திருத்தல் என்ற குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியவர்களாவர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.இதற்கிடையில், 2027-2028 ஆம் ஆண்டுக்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிலையப் பதிவுப் புதுப்பித்தலும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்குத் தாமதக் கட்டணம் அறவிடப்படுவதுடன் கடுமையான சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் பாதுகாப்பு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் இன்று முக்கிய தீர்மானம்

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை ரூ.17 ஆல் அதிகரித்துள்ளன. இந்த விலை அதிகரிப்பு நேற்றுமுன்தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளமையே மாவின் விலையை உயர்த்துவதற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவின் விலை உயர்வுக்கு ஏற்ப பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான இறுதி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைப்பு:

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும். அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும்பு துறைமுக நகர கொலைச் சம்பவம் – இரு சீன பிரஜைகள் கைது

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீன பிரஜைகள் சீகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (28) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 23ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடத்தப்பட்ட நபரின் சடலம் எஹெலியகொடை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இதன்போது,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கோதுமை மா விலை இன்று முதல் உயர்வு – சிற்றுண்டி விலையும் அதிகரிப்பு

பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பரோட்டா, மரக்கறி ரொட்டி, முட்டை ரோல் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும் – ஜனாதிபதி

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்து,  சுமார் மூன்றரை ஆண்டு காலம் கடினமான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்த பூனாகலை, கபரகலை பகுதியினைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயாபுரம்’ வீட்டுத் திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். எதிர்வரும் வரவு- செலவுத் திட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கை யர்கள் ஊடாக அச்சமின்றி நாடு திரும்பலாம்

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள், அண்மையில் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றன. இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

டெங்கு தீவிரம்; உயிரிழப்பு 72 ஆக உயர்வு

இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளதுடன், பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இதுவரை நாட்டில் 94 ஆயிரத்து 292 பேர் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 29ஆயிரத்து 962 பேருக்கு டெங்கு தொற்று பதிவாகியுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தின் முதல் சில நாட்களில் மேலும் 8 ஆயிரத்து 956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் இதுவரை 49 ஆயிரத்து 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த நோயாளர்களில் 52.92 சதவீதமாகும். தென் மாகாணத்தில் 13 ஆயிரத்து 779 பேரும், மத்திய மாகாணத்தில்…

மேலும் படிக்க