அண்மை செய்தி இலங்கை செய்தி. 

O/L பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (G.C.E. O/L) பரீட்சை விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களைக் ஒன்லைன் (Online) முறைமை ஊடாகத் திணைக்களம் கோரியுள்ளது. இதற்கமைய, பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் ஜூன் 25 முதல் ஜூலை 8ஆம் திகதி வரை ஒன்லைன் மூலம் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.doenets.lk இன் “Exam Information Centre” பகுதிக்குச் செல்வதன் மூலமோ அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற நேரடி இணைய முகவரி மூலமோ விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் 2025 சாதாரண தரப் பரீட்சைக்குப் பயன்படுத்திய பரீட்சை சுட்டெண் (Index number) மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், புதியவர்கள் அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பதிவிட்டுப் பதிய…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

TIN பெற அவசரம் இல்லை: நீண்ட வரிசை குறித்து யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாணத்தில் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெறுவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்பாக, யாழ்ப்பாண அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் விளக்கமளித்துள்ளார். காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாக நிலவும் நெரிசலைத் தொடர்ந்து, அரச அதிபர் நேற்று பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து பொதுமக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், TIN இலக்கத்தை ஜூன் 30ஆம் திகதிக்குள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்தக் காலக்கெடுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், TIN பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எந்தவித கட்டணமும் அறவிடுவதில்லை என்றும், இதற்காக பணம் பெறுவதோ அல்லது வழங்குவதோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே TIN பதிவு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மலேசியா விலிருந்து நாடு கடத்தப்பட்ட முக்கிய குற்றவாளி

பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” என அழைக்கப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் தங்கியிருந்த அவர், அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதையடுத்து, நேற்று (25) நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் ஆரம்பக்கட்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 42 வயதுடைய சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் (Interpol Red Notice)  பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது, 2022 ஆம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கமைய, எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால, கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அத்துடன், ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை மாற்றம் அறிவிக்கப்பட்ட பின்னரே பேருந்து கட்டண உயர்வின் இறுதி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன்படி, எரிபொருள் விலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பேருந்து கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வவுனியாவில் 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற ஒருவரை கைது

வவுனியாவில் 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.  குறித்த கைது நடவடிக்கை வவுனியா லக்சபானா வீதிக்கு நேற்று இடம்பெற்றது. வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த காரில் கொண்டுவரப்பட்ட கஞ்சாவினை மற்றொரு முச்சக்கரவண்டிக்கு மாற்றமுற்றப்பட்ட போது இவ் கைதுசம்பவம் இடம்பெற்றது. இதன் போது கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை பொலிசார் மீட்டுள்ளதுடன், வாகனத்தையும், முச்சக்கவண்டியையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என பொலிசார் தெரிவித்ததுடன் கைது செய்யப்பட்டவர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு சமூகமளித்துள்ளார்.குறித்த பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்றிற்கு அமைவாக நீதிமன்றம் விடுத்த அறிவித்தலுக்கு இணங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று (25) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முல்லைத்தீவு, கேப்பாபிலவு மக்கள் மீண்டும் ஒரு தார்மீக நிலமீட்புப் போராட்டம்

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் மீண்டும் ஒரு தார்மீக நிலமீட்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ​மக்கள் ஏந்தியுள்ள பதாகைகளில் உள்ள முக்கிய கோரிக்கைகள்: ​”வாக்குறுதி என்னாச்சு? காணி விடுவிப்பு எப்போது? “ – தங்களுக்கு வழங்கப்பட்ட காணி விடுவிப்பு தொடர்பான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமை? ​”நீதி எங்கே? நீதி எங்கே? தமிழ் மக்களின் நில உரிமை எங்கே?” – பூர்வீக நிலங்களை இழந்து தவிக்கும் தமிழ் மக்களின் அடிப்படை நில உரிமை மற்றும் நீதிக்கான கோரிக்கை. ​”நாடா? … இராணுவ ஆட்சியா?” – தங்களின் வாழ்விடங்கள் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிரான கண்டனம். ​பல வருடங்களாகத்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளியில் அதிகரிக்கும் வீதி விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை கோரி கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் அதிகரிக்கும் வீதி விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை கோரி கவனயீர்ப்பு போராட்டம். கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்கள் தொடர்பிலும், கடந்த 22.06.2026 அன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த ஓய்வு பெற்ற அதிபர் திரு. பெருமாள் கணேசன் அவர்களின் மரணம் தொடர்பிலும், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் தங்களது கவலைகளையும் கோரிக்கைகளையும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. எஸ். முரளிதரன் அவர்களிடம் முன்வைத்தனர். இதன்போது, குறித்த விபத்து தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் வகையில் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்களின் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்ட மாவட்ட அரசாங்க…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கரைவலை மீன்பிடி முறைமை க்கு தடை விதிக்கப் படவில்லை அமைச்சர் சந்திரசேகர்

பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: “கரைவலை மீன்பிடி என்பது ஒரு பாரம்பரிய முறைமையாகும். அந்த முறைமை இலங்கையில் தடை செய்யப்படவில்லை; அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.எனினும், உழவு இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, கடல்வளத்தை அழிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் மீன்பிடி நடைமுறைகளே தடை செய்யப்பட்டுள்ளன. எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் இன்றி, தமக்குத் தேவையான விதத்தில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடந்த காலங்களில் துறைசார் அமைச்சர்கள் அனுமதி வழங்கியமையாலேயே கரைவலை மீன்பிடித் தொழிலில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியாவில் உலக சுற்றாடல் தின நிகழ்வும் அறுவடை சஞ்சிகை வெளியீடும்!

வடக்கு மாகாண விவசாய அமைச்சும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய உலக சுற்றாடல் தின நிகழ்வும் அறுவடை சஞ்சிகை வெளியீடும் வவுனியா மாநகரசபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது. வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஶ்ரீ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக வவுனியா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் அ.அற்புதராஜா கலந்துகொண்டார்.முன்னதாக வவுனியா நகரசபை வாயிலில் இருந்து விருந்தினர்கள் ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து கலைநிகழ்வுகள் உட்பட ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றது.

மேலும் படிக்க