இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில்,இருவர் உயிரிழந்துள்ளனர்.

காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில், கெப் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (22) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும்,  முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறு ரயிலுடன் மோதிய கெப் வாகனம் அருகில் உள்ள நிர்மாணத் திட்டமொன்றில் பணிபுரியும் ஒருவருடையது என தெரியவந்துள்ள. ரயில் மோதியதையடுத்து கெப் வாகனம் சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.இந்த விபத்தில் கெப் வாகனத்தின் சாரதி உட்பட மூன்று…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பெரும்போக அறு வடை நெல்லினை வறிய குடும்பங்க ளுக்கு பகிர்ந்து அளித்த விவசாயி

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவர் ஒவ்வொரு வருடமும் பெரும்போக அறுவடை முடிவடைந்ததும் தாம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையில் அறுவடை செய்த நெல்லினை தமது பகுதியில் நெற்செய்கை  மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றார். நேற்றுமுன்தினம் (20) தர்மபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வைத்து தம்மால் முடிந்த வரையில் அறுவடை செய்த நெல்லின் ஒரு பகுதியில் 30 குடும்பங்களுக்கு ஒரு மூட்டை வீதம் வழங்கினார்.இதன்போது கூறுகையில், தமது பெயரினையோ அல்லது தமது முகத்திலையோ ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்பவில்லை எனவும் பிறருக்கு உதவும் மனம் இருந்தால் மட்டும் போதும், என்னால் முடிந்தவரை ஒவ்வொரு வருடமும் இதேபோன்று வழங்கி வருவேன். வழங்குவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

உலகளாவிய அதிகார மாற்றங்களும் நிழல் போர்களும்: ஒரு மூலோபாய உளவுத்துறை ஆய்வு

உலகளாவிய அதிகார மாற்றங்களும் நிழல் போர்களும்: ஒரு மூலோபாய உளவுத்துறை ஆய்வு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ➤ நார்ட் ஸ்ட்ரீம் அதிர்வலைகள்: உளவுத்துறை, ரகசியம் மற்றும் நாசவேலை அரசியல் நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புகளைச் சுற்றிய சர்வதேச சர்ச்சையை ஒரு முக்கிய புலனாய்வு வெளிப்பாடு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் நாசவேலைத் திட்டம் குறித்து அமெரிக்க உளவுத்துறைக்கு முன்கூட்டியே தகவல் இருந்ததாகவும், பின்னர் அதை மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் அறிக்கை கூறுகிறது. மேலும், இந்தத் திட்டம் உக்ரைன் அதிபரின் நேரடி அங்கீகாரம் இன்றி, ராணுவ கட்டளை அமைப்புக்குள் ஒப்புதல் பெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கூற்றுகள் உண்மையாக இருந்தால், அவை தீவிரமான புவிசார் அரசியல் விளைவுகளை உருவாக்கும். போர்கால முடிவெடுக்கும் அமைப்புக்குள் உட்புற முரண்பாடுகள் இருந்திருக்கலாம் என்பதையும், சில ராணுவத் தீர்மானங்கள் சிவில் அரசியல் கட்டுப்பாட்டை மீறி எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதையும்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

புளியம்பொக்கணை ஆலய வருடாந்த ஆலோசனைக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான புளியம்பொக்கணை ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 25.03.2026 அன்று விளக்கு வைக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி, கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் உற்சவம் எதிர்வரும் 25.03.2026 அன்று விளக்கு வைக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகி, 01.04.2026 அன்று பிரதான பொங்கல் உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. இப் பொங்கல் உற்சவத்தினை சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு முக்கிய ஆலோசனைக் கூட்டம் ​கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் அவர்களின் தலைமையில் 20.02.2026 நேற்றையதினம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்வரும் உற்சவ காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. ​பக்தர்களுக்கான போக்குவரத்து, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது பற்றியும்,…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் யாழ் பருத்தித்துறையில் கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ் கலிகைச் சந்தியில் வைத்து 15.02.2007 அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் ஈபிடிபியினருடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி இன்று சனிக்கிழமை (21.02.2026) சற்றுமுன் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் யாழ் பருத்தித்துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் மதிவாணன் கைகளும், கால்களும் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, இரத்தக் கறை படிந்திருப்பது போன்ற ஆடை அமைப்புடன்ன நீதி கோரிய காட்சி காண்பவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்தது. இதன்போது கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்காகவும் குரல் எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். ஹட்டன் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வர்த்தக லொறி ஒன்று, வட்டவளை சிங்கள பாடசாலைக்கு அருகில் உள்ள பாதாள மதகு ஒன்றிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.லொறிக்குள் இறுகிய நிலையில் சிக்கிக்கொண்ட சாரதி மற்றும் உதவியாளரை, பொலிஸாரும் பொதுமக்களும் சுமார் 1 மணிநேரம் போராடி மீட்டனர்.காயமடைந்தவர்கள் முதலில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை களைப்பு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

நிழல் அமைச்சர்களை நியமித்து ஆட்சியைக் கொண்டுநடத்துமாறு ஆளுநர் வேதநாயகனு க்கு உத்தரவு! கஜேந்திரகுமார்

இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை. இந்த விடயத்தில் அரசு தலையிட்டு காணிகளை இழந்த மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது:- “தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகளும், அரச அதிகாரிகளும், திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் கலந்துகொண்டனர். ஆனால், காணிகளை இழந்த மக்கள் இதில் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை. இது எந்த வகையில் நியாயம்? தையிட்டி திஸ்ஸ விகாரைக்கும் அரசுக்கும் அல்லது பௌத்தத்துக்கும் தொடர்பில்லை. இராணுவமே இந்த ஆக்கிரமிப்பைச் செய்தது. அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாதான் இந்த விகாரையை அமைப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்டார்.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இந்திய பிரதிநிதிக ளுக்கும்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரு க்கும் சந்திப்பொன்று நடை பெற்றுள்ளது

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயரஸ்தானிகர் சத்தியஞ்சல் பான்டே மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் (கொன்சூலர் ஜெனரல்) சாய் முரளி ஆகியோருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் இன்று காலை 11:30 மணிக்கு கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்திப்பொன்று நடை பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின்போது – அனுர அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் கொண்டுவரவுள்ள புதிய ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு தொடர்பிலும் மற்றும் இந்த அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகள், ஒருகட்சி ஆட்சி முறையை நோக்கியதான ஜனநாயக விரோத போக்குகள் குறித்தும் இந்திய தூதரக பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தெளிவுபடுத்தப்பட்டது. இனப் பிரச்சினைக்கு தீர்வு என்னும் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

கரீபியன் பிராந்தியத்தில் எழும் புவிசார் அரசியல் புயல் எரிசக்தி, உத்தி மற்றும் உலக அதிகாரப் போட்டி

கரீபியன் பிராந்தியத்தில் எழும் புவிசார் அரசியல் புயல் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ➤ ரஷ்யா–கியூபா கூட்டணி vs அமெரிக்க அழுத்தம்: எரிசக்தி, உத்தி மற்றும் உலக அதிகாரப் போட்டி ✧. மாஸ்கோவில் இராஜதந்திர அரங்கம்: மூலோபாய சமிக்ஞைகள் சமீபத்தில் மாஸ்கோவில் விளாடிமிர் புடின் மற்றும் கியூபா வெளியுறவு மந்திரி புருனோ ரோட்ரிக்ஸ் பரிலா ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பு, ஒரு முக்கியமான மூலோபாய இராஜதந்திர நிகழ்வாகும். இது ஒரு சாதாரண சந்திப்பு அல்ல; கியூபாவை ரஷ்யா நீண்டகால மூலோபாய கூட்டாளியாகக் கருதுகிறது என்பதற்கான வெளிப்படையான அறிவிப்பாகும். புடினின் நிலைப்பாடு தெளிவானது: ஹவானா மீது விதிக்கப்பட்ட தடைகளை மாஸ்கோ நிராகரிக்கிறது; அவற்றை சர்வதேச அரசியல் கருவிகளாக ஏற்க மறுக்கிறது. இது கியூபாவிற்கு ஆதரவு அளிப்பதைக் கடந்தும், மேற்கத்திய பொருளாதாரத் தடை அமைப்புக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும். ✧. அரசியல் ஆயுதமாக வரலாற்று…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

பிரதமரை நரேந்திர மோடியை, இன்று (20) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரை யாடியுள்ளார்

இந்திய பிரதமரை நரேந்திர மோடியை, இன்று (20) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த இருதரப்பு சந்திப்பானது இன்று (20) நடைபெற்றுள்ளது.புதுடெல்லியில் இடம்பெறும் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போது AI Impact 2026 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக ஜனாதிபதி அநுர இந்தியப் பிரதமருக்கு இதன்போது எனது நன்றிகளைத் தெரிவித்தார்..இந்திய – இலங்கை இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்தோடு, ‘டிட்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது இலங்கைக்கு வழங்கிய விசேடமான ஒத்துழைப்பைப் பாராட்டியதுடன், அதற்காக இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி அநு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் படிக்க