சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜி ற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் – ரவிகரன் எம்.பி
சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் – ரவிகரன் எம்.பி
விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்ததளபதியும் சமர்க்களநாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,எமது ஈழ விடுதலைப்போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் எமை விட்டுப் பிரிந்து 18ஆண்டுகள் கடந்திருக்கின்றன.
கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயரையுடைய சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்தவர்.
உலகப் போரியல் வல்லுநர்களே கண்டு வியந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு இந்த உயரிய சபையிலே சிரம் தாழ்த்தி எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.

