தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஏழு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் பறக்கும் விமானம்

திருச்சி – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, இரு நகரங்களுக்கும் இடையிலான விமானங்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படவுள்ளன.செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது.திருச்சியில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 1.50 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 3.25 மணிக்கு திருச்சியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த விமான சேவை, சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தேராவில் துயிலும் இல்லத்திலிருந்து நல்லூருக்கு புறப்பட்டது திலீபனின் நினைவு ஊர்தி

தேராவில் துயிலும் இல்லத்திலிருந்து நல்லூருக்கு புறப்பட்டது திலீபனின் நினைவு ஊர்தி தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு இறுதிநாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் தயகப் பரப்பிலும், புலம்பெர் தேசங்களிலும் 26.09.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் முல்லைத்தீவு – விசுவமடு, தேரவில் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து, திலீபன் அவர்களின் உருவப்படம் தாங்கிய நினைவு ஊர்தி ஒன்று, யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள திலீபன் அவர்களின் நினைவிட வளாகம் நோக்கிப் புறப்பட்டுள்ளது. குறிப்பாக தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக்குழுவின் செயலாளர் சுந்தரலிங்கம் யோகலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட, இந்த திலீபன் அவர்களது உருவப்படம் தாங்… [11:01 am, 26/09/2026] சரவணன் முல்லை: தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு இறுதிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லையில் சிறார் களின் பாதுகாப்பை யும், உரிமைகளையும் பாதுகாக்க வலியுறுத்தி பேரணி;

முல்லையில் சிறார்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்க வலியுறுத்தி பேரணி; சிறுவர் பாதுகாப்பு மாநாடும் முன்னெடுப்பு முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பினையும், சிறுவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், “எதிர்கால தலைவர்களைக் கட்டி எழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடு ஒன்றும் 27.08.2026இன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மதுரம், விக்றி ஜெனரேஷன், ஷாறிபாத், ஹார்மெல், ப்லோமிங் ஆகிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் ஏற்பாட்டில் இந்த பேரணியும், மாநாடும் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் சிறுவர்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இடம்பெற்ற குறித்த பேரணியானது முல்லைத்தீவு பேருந்துநிலைய வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸ்நிலையம்வரை இடம்பெற்றது. அதற்கமைய சிறார்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டும், கோசங்கள் எழுப்பப்பட்டும் பேரணி முன்னைடுக்கப்பட்டது. அத்தோடு பேரணியின் நிறைவில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்திய மீனவர்களின் 90 படகுகளை கடலில் மூழ்கடிக்க தீர்மானம்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட சுமார் 90 இந்திய மீன்பிடிப் படகுகளை கடலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடபகுதி, குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகள், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் மயிலிட்டி துறைமுகத்தில் கடந்த சில வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து வருடங்களாக மயிலிட்டி துறைமுகத்தில் தரித்து நிற்கும் குறித்த படகுகளில் சில, உரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும், சில படகுகள் இலங்கை மீனவர்களின் தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள சுமார் 90 படகுகளை கடலில் புதைத்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீண்ட காலமாக மயிலிட்டி துறைமுகத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் குறித்த படகுகளால் ஏற்படும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கொக்குத் தொடுவாயில் சட்டவிரோத உப்பளம் அமைக்கும் நடவடிக்கை நிறுத்தம்

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவின் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களின் தனியார் காணிகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத உப்பள அமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் வலியுறுத்தலுக்கு அமைவாக, கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கரைதுறைப்பற்று பிரதேசசபைக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் துணையுடன் கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். குறித்த நடவடிக்கையை தாம் நேரில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம்: ஆளுநரின் வர்த்தமானிக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

வவுனியா மாநகர முதல்வர் காண்டீபனை பதவிநீக்கம் செய்து வடமாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மீதான இடைக்காலத் தடையுத்தரவுகளை, வழக்கு முடிவடையும் வரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வவுனியா மாநகர முதல்வர் காண்டீபனின் பதவியை நீக்கியிருந்தார். இதற்கு எதிராக காண்டீபன் தரப்பினால் வவுனியா மேல்நீதிமன்றில் எழுத்தாணை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மனுதாரர் தரப்பின் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் மூன்று இடைக்கால நிவாரணங்களை வழங்கியிருந்தது. அதன்படி, காண்டீபனை மாநகர முதல்வர் அல்லது மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வழிவகுக்கும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டது. மேலும், அந்த வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் எதிர்மனுதாரர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. அத்துடன்,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் இருந்து 24.8 பில்லியன் ரூபாவை வெளி நாட்டுக்கு பணப்பரி மாற்றம் செய்த நபர் சிக்கினார்!

டெலிகிராஃபிக் பரிமாற்றங்கள் மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு 24.8 பில்லியன் ரூபாய்க்கு இணையான வெளிநாட்டு நாணயத்தை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கொட்டிகாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் தகவலின்படி, குறித்த நிதிப் பரிவர்த்தனைகள் 2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், குறித்த பெருந்தொகையான நிதி வெளிநாட்டுக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்படி, குறித்த பணப் பரிமாற்றங்களின் பின்னணி, அவற்றுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிதி நகர்த்தப்பட்ட விதம் தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

திருகோண மலையில் தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை (22)  மாலை 6.00 மணிக்கு 08 நாள் நினைவேந்தல் நிகழ்வு  இடம்பெற்றது. இதன்போது பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து விளக்கேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி புலச் செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈழத்தின் யாழ்ப்பாண த்தில் நடந்தேறிய ‘வைரக்குடுவை தொகுதி 02’ நூலின் வெளியீட்டு விழா

ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய ‘வைரக்குடுவை தொகுதி 02’ நூலின் வெளியீட்டு விழா. வைரக்குடுவை தொகுதி 02 நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய வீரகேசரி வார வெளியீடு பத்திரிகையின் பிரதி ஆசிரியர் திருமதி ரேணுகா பிரபாகரன் அவர்கள் இப்படிக் குறிப்பிடுகின்றார். ‘இயந்திரமயமான புலம்பெயர் வாழ் கால ஓட்டத்தில் தனக்கு தனக்கு என தாவியோடும் மனிதர்கள் மத்தியில் ஒவ்வொரு வாரமும் மூலை முடுக்கில் உள்ள ஒவ்வொரு ஆளுமைகளையும் தேடிப்பிடித்து தகவல்களை திரட்டி இவ்வரிய கட்டுரைகளை து.திலக்(கிரி) அவர்கள் தருகின்றார்’ என்று. உரும்பையூர் என சிறப்பித்துச் சொல்லப்படும் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவரும் சுவிற்சர்லாந்தில் வசிப்பவருமான ஈழத்துப் படைப்பாளர் து. திலக் (கிரி) அவர்கள் ஈழத்தின் வீரகேசரி பத்திரிகையில் ஒவ்வொரு வாரமும் தொடராக எழுதி வருகின்ற ஆளுமைகள் பற்றிய ஆவணவாக்கல் கட்டுரைகளின் தொகுப்பு நூலாகிய வைரக்குடுவை தொகுதி இரண்டு நூல் வெளியாகியுள்ளது. வைரக்குடுவை நூலில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

புதுக்குடியிருப்பில் காணியற்ற 437 குடும்ப ங்களுக்கும் காணிகளை வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன்

புதுக்குடியிருப்பில் காணியற்ற 437குடும்பங்களுக்கும் காணிகளை வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன் எம்.பி வலியுறுத்து முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசேயலாளர் பிரிவில் குடியிருப்பதற்கு காணிகளில்லாத 437குடும்பங்களுக்கும் விரைவாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள காணிகள் விடுவிக்கப்படும் சந்தர்பங்களில், காணி அற்றோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், சட்டவிரோதமானமுறையில் அதிகளவான காணிகளைக் கையப்படுத்தியுள்ளோரையும் அந்தக்காணிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், அதன்பின்னர் அந்தக் காணிகளையும் காணி அற்றோருக்கு பிரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரவிக்கையில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 437பேருக்கு குடியிருப்பதற்கு காணிகள்…

மேலும் படிக்க