தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அம்பாறையில் புதிய வீட்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீட்டுவசதி உதவித் திட்டத்தின் கீழ், ‘வளமான வீடு அழகான வாழ்க்கை’ எனும் தொனிப் பொருளில் அம்பாறை நகவம்புர கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில் புதிய வீடு ஒன்றின் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பத்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இப்புதிய வீட்டின் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (18) அம்பாறை பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான மஞ்சுள ரத்நாயக்க, புதிய வீட்டிற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வீடொன்றிலிருந்து தாயும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த அலஸ்கிறின் (வயது 60) என்ற தாயாரும், அவரது மகனான அயந்தன் (வயது 35) என்ற இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தோணிக்கல் பகுதியிலுள்ள வீடொன்றில் தாயும் அவரது மகனும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், உறவினர்கள் இருவர் மாலையில் குறித்த வீட்டிற்குச் சென்றபோது, தாய் இரத்த காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார். .இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ்நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற குற்றத் தடுப்புப் பொலிஸார், தடவியல் காவல்துறையினரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி ஹற்றனில் கவனயீர்ப்பு போராட்டம்

சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஹற்றனில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. ஹற்றன் மல்லியப்பூ சந்தியில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று (20) காலை இந்த அமைதிவழிப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை – இந்து இயக்க மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க