இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இன்று (19) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாய மாக்கப்பட்டு ள்ளது. 

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இன்று (19) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட விதிகளின்படியாகும். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்ற விதிகள் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட போதிலும், சில வாகனங்களில் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கான ஆசனப்பட்டிகள் இல்லாத காரணத்தினால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கமைய, பின் இருக்கைகளிலும் ஆசனப்பட்டிகளை பொறுத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்ட ஒரு வருட கால அவகாசம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று (18) நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அனோஜனின் விடுதலைக்காக சவூதித் தூதுவரைச் சந்தித்து முறையிடத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை முயற்சி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில், இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதுவரை நேரில் சந்தித்து, அந்த நாட்டுப் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவுத்திடம் கோரிக்கை முன்வைக்கத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்துப் பேரவையின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்:- “சவூதி அரேபியாவில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு, இலங்கைக் குடியரசுக்கான சவூதி அரேபியத் தூதுவரை நேரடியாகச் சந்தித்து அவர் ஊடாக ஒரு கூட்டு வேண்டுகோளை முன்வைக்க வேண்டும் எனத் தமிழ் பேசும்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

அனோஜன் சிவராசா விவகாரம் அவசர நடவடிக்கைக்கு ரிஷாட் பதியுதீன் உறுதி

அனோஜன் சிவராசா விவகாரம் அவசர நடவடிக்கைக்கு ரிஷாட் பதியுதீன் உறுதி சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று இரவு (18) கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன், அனோஜன் சிவராசாவுக்கு சவுதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து,…

மேலும் படிக்க