தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஏழு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் பறக்கும் விமானம்

திருச்சி – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, இரு நகரங்களுக்கும் இடையிலான விமானங்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படவுள்ளன.செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது.திருச்சியில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 1.50 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 3.25 மணிக்கு திருச்சியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த விமான சேவை, சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தேராவில் துயிலும் இல்லத்திலிருந்து நல்லூருக்கு புறப்பட்டது திலீபனின் நினைவு ஊர்தி

தேராவில் துயிலும் இல்லத்திலிருந்து நல்லூருக்கு புறப்பட்டது திலீபனின் நினைவு ஊர்தி தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு இறுதிநாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் தயகப் பரப்பிலும், புலம்பெர் தேசங்களிலும் 26.09.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் முல்லைத்தீவு – விசுவமடு, தேரவில் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து, திலீபன் அவர்களின் உருவப்படம் தாங்கிய நினைவு ஊர்தி ஒன்று, யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள திலீபன் அவர்களின் நினைவிட வளாகம் நோக்கிப் புறப்பட்டுள்ளது. குறிப்பாக தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக்குழுவின் செயலாளர் சுந்தரலிங்கம் யோகலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட, இந்த திலீபன் அவர்களது உருவப்படம் தாங்… [11:01 am, 26/09/2026] சரவணன் முல்லை: தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு இறுதிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லையில் சிறார் களின் பாதுகாப்பை யும், உரிமைகளையும் பாதுகாக்க வலியுறுத்தி பேரணி;

முல்லையில் சிறார்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்க வலியுறுத்தி பேரணி; சிறுவர் பாதுகாப்பு மாநாடும் முன்னெடுப்பு முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பினையும், சிறுவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், “எதிர்கால தலைவர்களைக் கட்டி எழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடு ஒன்றும் 27.08.2026இன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மதுரம், விக்றி ஜெனரேஷன், ஷாறிபாத், ஹார்மெல், ப்லோமிங் ஆகிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் ஏற்பாட்டில் இந்த பேரணியும், மாநாடும் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் சிறுவர்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இடம்பெற்ற குறித்த பேரணியானது முல்லைத்தீவு பேருந்துநிலைய வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸ்நிலையம்வரை இடம்பெற்றது. அதற்கமைய சிறார்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டும், கோசங்கள் எழுப்பப்பட்டும் பேரணி முன்னைடுக்கப்பட்டது. அத்தோடு பேரணியின் நிறைவில்…

மேலும் படிக்க