அண்மை செய்தி இலங்கை செய்தி. 

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி, புத்தளமம், மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடிய மர்த்த நடவடிக்கை மேற்கொள்க; கிராம மக்கள்

விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்க; கிராம மக்கள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவில், பட்டிக்குடியிருப்பு கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழ்மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான விண்ணாங்கம்பிட்டிக் கிராமத்தை மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளனர். அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைவாக கடந்த 11.10.2026அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த விண்ணாங்கம்பிட்டி பகுதிக்கு நேரில்சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். இதன்போதே அப்குதிமக்கள் தமது கிராமத்தை மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு தமது மீள்குடியேற்றத்திற்குத் தடையாக வனவளத்திணைக்களம் செயற்பட்டுவருவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில் குறித்த விண்ணாங்கம்பிட்டி கிராமத்தினை மீள்குடியேற்றுவதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தமிழர்கள் கொல்லப் பட்டது பெரும் பான்மை யினருக்கு வெற்றியாகும் போது, தமிழர்களால் எவ் வாறு இலங்கையராக உணரமுடியும்

இத்தீவில் தமிழர்கள் கொல்லப்பட்டது பெரும்பான்மையினருக்கு வெற்றியாகும்போது, தமிழர்களால் எவ்வாறு இலங்கையராக உணரமுடியும் – கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி 1950 களில் கல்லோயா குடியேற்றத் திட்டங்கள் தொடக்கம் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரையில் தமிழ்மக்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையின ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்தநாட்டில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டது பெரும்பான்மை இனத்தவர்களான உங்களுக்கு வெற்றியாகும்போது, இத்தீவிலுள்ள தமிழர்கள் எவ்வாறு தம்மை இலங்கையர்களாக உணரமுடியுமெனவும் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை இலங்கையர்களாக உணரவைக்கும் நல்லிணக்கத்தை இத்தீவிலுள்ள பெரும்பான்மை இன ஆட்சியாளர்கள் இனியேனும் ஏற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் 09.10.2026இன்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் முன்மொழியப்பட்ட பிரேரணையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பேரவையை தலைமை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின் எதிர்காலம் குறித்து ஆழமாகச் சிந்தித்த மிக முக்கிய சிந்தனையாளரான ஜோதிலிங்கம் ஐயாவின் இழப்பு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும் எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காலமான சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் சிந்தனையாளருமான ஜோதிலிங்கம் அவர்களின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள விசேட இரங்கல் செய்தியிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜோதிலிங்கம் ஐயா வெறும் ஆசிரியர் அல்லது வழக்கறிஞர் மட்டுமல்ல; என் பார்வையில் அவர் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சிறந்த சிந்தனையாளர். அன்றாட வாழ்வின் கடமைகளுக்கு அப்பாற்பட்டு, சமுதாயத்தைப் பற்றியும், தமிழ் மக்களையும் தமிழ் தேசத்தையும் பற்றியும் ஓயாது சிந்திப்பவராக அவர் செயற்பட்டார். இந்தத்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையை மீட்டுத்தருமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை பகுதியில் தாம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வந்த காணிகளிலிருந்து வெளியேற்றப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள கால்நடைப் பண்ணையாளர்கள், தமது மேய்ச்சல் தரைகளை மீண்டும் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தரப்பினர் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸாரும் மகாவலி அதிகாரிகளும் தம்மை வெளியேற்றும் வகையில் செயற்படுவதாகவும், அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இடமளிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த மயிலத்தமடு கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன், தாம் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்த மேய்ச்சல் தரைகளில் கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டபோதிலும் தீர்வு கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாது எனக்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தாக்குதல் அச்சத்தால் விமானங்களை ரத்து செய்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தைக் குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது விமானப் பயணங்களைத் நாளை (10) வரை ரத்து செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து ரியாத் நோக்கிப் பயணிக்கவிருந்த UL 265 விமானமும், இன்று அதிகாலை ரியாத்திலிருந்து கொழும்பு திரும்பவிருந்த UL 266 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகள் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வாடிக்கையாளர் மையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் காரணமாக உலகம் முழுவதிலுமிருந்து ரியாத் நகரை நோக்கிச் செல்லும் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, நாகொட வீதியிலுள்ள உணவகம் ஒன்றில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவரது மனைவி சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தத் தாக்குதலுக்குத் T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றப்பிரிவு, பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, தடயவியல் பொலிஸார் மற்றும் களுத்துறை தெற்கு பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.எனினும், இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அரசியல் ஆய்வாளர் சி. அ யோதிலிங்கம் காலமானார்

அரசியல் ஆய்வாளர் சி. அ யோதிலிங்கம் காலமானார் நிமிர்வின் வழிகாட்டிகளில் ஒருவரும், அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், ஓய்வுநிலை ஆசிரியருமான சி.அ யோதிலிங்கம் அவர்கள் காலமாகியுள்ளார். வயிற்றுப் பகுதியில் கட்டியொன்றை அகற்றுவதற்காக நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக நடந்த அறுவைச் சிகிச்சையை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் காலமாகியுள்ளார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெல் உலர்த்துவது தொடர்பில் விவசாயிகளுக்கு மாற்று வழிகளை அறிமுகப்படுத்துக ;ரவிகரன் எம்.பி

நெல் உலர்த்துவது தொடர்பில் விவசாயிகளுக்கு மாற்று வழிகளை அறிமுகப்படுத்துக; வீதியில் உலரவிடும் நெல்லினை உணவுப் பாதுகாப்பு ஆய்விற்குட்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து வீதியோரங்களில் நெல் பரவி உலர்த்துவதால் விபத்துகள் ஏற்படுவதுடன், உணவுப்பாதுகாப்பும் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்த வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நெல் உலர்த்துவது தொடர்பில் விவசாயிகளுக்கு மாற்று வழிகளை அறிமுகப்படுத்துமாறும் கோரிக்கைவிடுத்துள்ளார். அதேவேளை வீதியில் உலரவிடும் நெல்லினை உணவாக உட்கொள்வோர்க்கு நீண்டகாலச் சூழமைவில் உடலியல் பாதிப்புக்கள் ஏற்படுமா? என்பது தொடர்பிலும் முறையான உணவுப் பாதுகாப்பு ஆய்வுகளை அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் 07.10.2026இன்று உரையாற்றும்போதே அவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.அந்தவகையில் இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,நெல் உலர்த்துவதில் விவசாயிகள் சவால்களை எதிர்கொள்கின்றனர். வீதியோரங்களிலும் வீதியின் ஒருபாதியிலும் நெல் உலர்த்தும் நடைமுறைக்கு விரைவாக…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிண்ணியா வைத்திய சாலை மற்றும் பாடசாலை களுக்கு ரூ.10 இலட்சம் பெறுமதியான உபகரணங் கள்

வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோரின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், கிண்ணியா வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்கு சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வு இன்று (7) கிண்ணியா பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் எம். எச். எம் கனி தலைமையில் நடைபெற்றது. கிண்ணியா அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக் மற்றும் வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அஷ்ரப் இம்ரான் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு உபகரணங்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர். இதன்போது, கிண்ணியா வைத்தியசாலைக்கு சிறுநீரக நோயாளர்களின் பயன்பாட்டுக்கான சுத்திகரிப்பு படுக்கை மற்றும் குளிரூட்டி இயந்திரங்கள் உள்ளிட்ட…

மேலும் படிக்க