அண்மை செய்தி தாயகச் செய்தி 

குச்சவெளியில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புல்மொட்டை நான்காம் கட்டைப் பகுதியில், தித்வா புயலினால் வீடுகள் பாதிக்கப்பட்ட ஜின்னா நகர் மற்றும் கமாஸ் நகர் கிராமங்களைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கான புதிய வீடுகளின் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (17) நடைபெற்றது. ஒவ்வொரு வீடும் தலா 50 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதனுடன், சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக கமாஸ் நகரைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளி ஒருவருக்காக 10 இலட்சம் ரூபா செலவில் புதிய வீடொன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், வீடுகளின் நிர்மாணப் பணிகளுக்கான காசோலைகளும் உரிய பயனாளிகளிடம் வழங்கி வைக்கப்பட்டன. குச்சவெளி பிரதேச செயலாளர் யூ. எல். சியாஉல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யோகபுரம் மகாவித்தியா லயத்தில் சிறப்புற இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வு;

யோகபுரம் மகாவித்தியாலயத்தில் சிறப்புற இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வு; பிரதம விருந்தினராக ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – மல்லாவி, யோகபுரம் மகாவித்தியாலயத்தில் 16.09.2026நேற்று மாணவர் பாராளுமன்ற அமர்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் பாடசாலையின் முதல்வர் க.சசிகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வானது மாணவர் பாராளுமன்ற அணியினர் மற்றும் விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாடசாலை முதல்வரின் தலைமையுரை இடம்பெற்றதையடுத்து மாணவர் பாராளுமன்ற அமர்வு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமானது. அதற்கமைய மாணவர் பாராளுமன்றத்தின் பிரதமரால் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டது. அதனையடுத்து மாணவர் பாராளுமன்துறைசார் அமைச்சர்களால் தமது அமைச்சுசார் நலத்திட்டங்கள் தொடர்பான முன்வைப்புக்களை முன்வைத்தனர். அந்தவகையில் மாணவர் பாராளுமன்றம் காரசாராமான விவதங்களுடன் ஜனநாயக மரபுகள் பின்பற்றப்பட்டு மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வனஇலாகா ஆக்கிர மித்துள்ள மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறு த்திய ரவிகரன்

மதவளசிங்கன்குளம் பகுதியில் வனஇலாகா ஆக்கிரமித்துள்ள மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; காணி விடுவிப்பு தொடர்பில் களஆய்வு முன்னெடுப்பு முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், வனவளத்திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியிருந்த நிலையில், வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் இணைந்த களஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம், வனவளத் திணைக்களம், நாடாளுமன்ற உறுப்பினர் துரைரராசா ரவிகரன், காணிகளுக்குரிய மக்கள் ஆகியோர் இணைந்து குறித்த பகுதிக்கு நேரில் சென்று இணைந்த களஆய்வு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், குறிப்பாக கடந்த 1979ஆம் ஆண்டு காலப்பகுதியில் மதவளசிங்கன்குளம் கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மக்களுக்கு உப உணவுப் பயிற்செய்கைக்கென வழங்கப்பட்ட காணிகளை தற்போது வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது.…

மேலும் படிக்க