இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்திய மீனவர்களின் 90 படகுகளை கடலில் மூழ்கடிக்க தீர்மானம்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட சுமார் 90 இந்திய மீன்பிடிப் படகுகளை கடலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடபகுதி, குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகள், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் மயிலிட்டி துறைமுகத்தில் கடந்த சில வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து வருடங்களாக மயிலிட்டி துறைமுகத்தில் தரித்து நிற்கும் குறித்த படகுகளில் சில, உரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும், சில படகுகள் இலங்கை மீனவர்களின் தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள சுமார் 90 படகுகளை கடலில் புதைத்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீண்ட காலமாக மயிலிட்டி துறைமுகத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் குறித்த படகுகளால் ஏற்படும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கொக்குத் தொடுவாயில் சட்டவிரோத உப்பளம் அமைக்கும் நடவடிக்கை நிறுத்தம்

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவின் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களின் தனியார் காணிகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத உப்பள அமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் வலியுறுத்தலுக்கு அமைவாக, கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கரைதுறைப்பற்று பிரதேசசபைக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் துணையுடன் கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். குறித்த நடவடிக்கையை தாம் நேரில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம்: ஆளுநரின் வர்த்தமானிக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

வவுனியா மாநகர முதல்வர் காண்டீபனை பதவிநீக்கம் செய்து வடமாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மீதான இடைக்காலத் தடையுத்தரவுகளை, வழக்கு முடிவடையும் வரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வவுனியா மாநகர முதல்வர் காண்டீபனின் பதவியை நீக்கியிருந்தார். இதற்கு எதிராக காண்டீபன் தரப்பினால் வவுனியா மேல்நீதிமன்றில் எழுத்தாணை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மனுதாரர் தரப்பின் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் மூன்று இடைக்கால நிவாரணங்களை வழங்கியிருந்தது. அதன்படி, காண்டீபனை மாநகர முதல்வர் அல்லது மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வழிவகுக்கும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டது. மேலும், அந்த வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் எதிர்மனுதாரர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. அத்துடன்,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் இருந்து 24.8 பில்லியன் ரூபாவை வெளி நாட்டுக்கு பணப்பரி மாற்றம் செய்த நபர் சிக்கினார்!

டெலிகிராஃபிக் பரிமாற்றங்கள் மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு 24.8 பில்லியன் ரூபாய்க்கு இணையான வெளிநாட்டு நாணயத்தை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கொட்டிகாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் தகவலின்படி, குறித்த நிதிப் பரிவர்த்தனைகள் 2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், குறித்த பெருந்தொகையான நிதி வெளிநாட்டுக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்படி, குறித்த பணப் பரிமாற்றங்களின் பின்னணி, அவற்றுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிதி நகர்த்தப்பட்ட விதம் தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

திருகோண மலையில் தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை (22)  மாலை 6.00 மணிக்கு 08 நாள் நினைவேந்தல் நிகழ்வு  இடம்பெற்றது. இதன்போது பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து விளக்கேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க