தேராவில் துயிலும் இல்லத்திலிருந்து நல்லூருக்கு புறப்பட்டது திலீபனின் நினைவு ஊர்தி
தேராவில் துயிலும் இல்லத்திலிருந்து நல்லூருக்கு புறப்பட்டது திலீபனின் நினைவு ஊர்தி
தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு இறுதிநாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் தயகப் பரப்பிலும், புலம்பெர் தேசங்களிலும் 26.09.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் முல்லைத்தீவு – விசுவமடு, தேரவில் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து, திலீபன் அவர்களின் உருவப்படம் தாங்கிய நினைவு ஊர்தி ஒன்று, யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள திலீபன் அவர்களின் நினைவிட வளாகம் நோக்கிப் புறப்பட்டுள்ளது.
குறிப்பாக தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக்குழுவின் செயலாளர் சுந்தரலிங்கம் யோகலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட, இந்த திலீபன் அவர்களது உருவப்படம் தாங்…
[11:01 am, 26/09/2026] சரவணன் முல்லை: தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு இறுதிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு
தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களுடைய 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் 26.09.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில் அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடரேற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டன.
மேலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், சமூகசெயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

