செம்மணி மனித புதைகுழி அகழ்வு: இதுவரை எலும்புக் கூடுகள் 405 அடையா ளம் காணப்பட்டன!
தலைப்பு: செம்மணி மனித புதைகுழி அகழ்வு: 30ஆம் நாளில் மேலும் 7 எலும்புக்கூடுகள் மீட்பு; இதுவரை 405 அடையாளம் காணப்பட்டன!
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 30ஆம் நாள் பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட நிபுணர்கள் மற்றும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றன.
நேற்றைய அகழ்வாராய்ச்சியின் போது, மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி, செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அகழ்வுப் பணிகளின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட இந்த எலும்புக்கூடுகளில், இதுவரை 377 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு, மேலதிக தடயவியல் மற்றும் அறிவியல் பரிசோதனைகளுக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் இன்னும் பல எலும்புக்கூடுகள் இருக்கலாம் என அஞ்சப்படுவதால், நீதிமன்ற உத்தரவின் பேரில் அடுத்தகட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

