தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மாவிலாறு பகுதியில் வெடிக்காத நிலையில் , 60mm ரக மோட்டார்

திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர காவல் பிரிவிற்கு உட்பட்ட மாவிலாறு பகுதியில் வெடிக்காத நிலையில் , 60mm ரக மோட்டார் குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளது.மாவிலாறு குளத்தின் இன்று (28.03.2026) புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், நீதிமன்ற அனுமதியைப் பெற்று குறித்த மோட்டார் குண்டுகளை விசேட அதிரடிப்படையின் ஊடாக செயலிழக்கச் செய்யவதற்கான மேலதிக ஏற்பாடுகளை சேருநுவர காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பது!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற கருத்து மாணவர்களிடையே பரவி வந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் பரீட்சைகளை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக வேண்டும். மேலும், 2026ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏப்ரல் 24ஆம் திகதி வரைஇணையவழியில் கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, அனைத்து விண்ணப்பதாரர்களும் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று, அங்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வவுனியா பிரமனாலங்குளம் மக்களிடமிருந்து அரசியல்வாதிகளுக்கு கண்டன அறிக்கை

வவுனியா – பிரமனாலங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள், சமீபகாலமாக தமிழ் அரசியல்வாதிகள் பொதுத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு வரும் இன, பிரதேச மற்றும் மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தும் கருத்துகள் குறித்து வன்மையான கண்டனத்தை இன்றையதினம் (27.03.2026) வெளியிட்டுள்ளனர். நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், அரசியல் லாபங்களுக்காகவும் அதிகாரப் போட்டிகளுக்காகவும் வெறுப்புப் பேச்சுகளை பயன்படுத்துவது சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமையை முன்னிட்டு, பிரமனாலங்குளம் மக்களால் அவசர வேண்டுகோளாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முக்கிய கோரிக்கைகள்: அரசியல்வாதிகள் இன, மொழி மற்றும் பிரதேச அடிப்படையிலான வெறுப்புப் பேச்சுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அரசியல் நாகரிகத்தை பேணி, மக்களின் பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக அணுக வேண்டும். அரசியல் கட்சிகள் தார்மீக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மட்டு. கொலை, சந்தேக நபர்களுக்கு விரைவில் உயரிய தண்டனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்…

மட்டு கொலை, கொள்ளைச் சம்பவ சந்தேக நபர்களுக்கு விரைவில் உயரிய தண்டனை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்… மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களுக்கு தகுந்த தண்டணை வழங்குவதுடன், அத்தண்டனை இவ்வாறான சம்பவங்கள் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துமாறு அமைய வேண்டும் எனக் கோரியும், சந்தேகநபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்றைய தினமும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த மார்ச் 20ம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரும், இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவமும், அத்துடன் தொடர்புபட்டதான கொலை விடயமும் கண்டுபிடிக்கப்பட்டு பிரதான சந்தேக நபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இவர்களில் பிரதான…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மூடப்பட்ட புகை யிரதக் கடவைக ளைத் திறக்க நடவடிக்கை….!

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மூடப்பட்ட புகையிரதக் கடவைகளைத் திறக்க நடவடிக்கை….! யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் யாழ் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ​குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன், யாழ்குடாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பான திட்ட முன்மொழிவுகளையும் சபைக்கு வழங்கியிருந்தார். ​குறிப்பாக, “யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரவுண் வீதி முதலாம் ஒழுங்கை – அன்னசத்திர முதலாம் ஒழுங்கைப் பகுதியில் மூடப்பட்டுள்ள புகையிரதக் கடவையை மீளத் திறப்பதன் மூலம், அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து அசௌகரியங்களுக்கு நிலையான தீர்வு கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறு” முன்வைக்கப்பட்ட முன்மொழிவை அடுத்து, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நகைகளை திருடிய பணிப்பெண் கைது

யாழ்ப்பாண நகர் பகுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய 54 வயதுடைய பெண் ஒருவர், தாம் வேலை செய்த வீட்டில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியில் கணவன் மனைவி இருவரும் வெளியே வேலைக்கு செல்பவர்கள் என்பதால், வீட்டு வேலைகளுக்காக இந்த பெண்ணை பணியில் அமர்த்தியிருந்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்த வீட்டில் இருந்த 14 பவுண் நகைகள் திடீரென காணாமல் போயின. இதனை அறிந்த தம்பதியினர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்தனர்.முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், வீட்டுப் பணிப்பெண்ணையே சந்தேகப்பட்டு கைது செய்தனர். குறித்த விசாரணையில் திருடப்பட்ட 14 பவுண் நகைகளும் மீட்கப்பட்டன.மேலும் , தான் இதற்கு முன்னர் பணியாற்றிய வேறொரு வீட்டிலும் நகைகளை திருடியதாக அந்த பெண் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது பொலிஸார் அவரை தடுத்து வைத்து…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள்

இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் இன்று (27) சப்ரகமுவ மாகாண பொலிஸ் மா அதிபரின் பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.இக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டார். இதன் போது பிரதி அமைச்சர் மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் வெகு விரைவில் தமிழ் அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்த நிலையிலே அமைச்சர் ஆனந்த் விஜயபால இப் பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் அதிகாரிகளை வெகு விரைவில் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார். அத்தோடு மலையக பகுதியில் உள்ள சட்ட விரோத மதுபானங்கள், மதுபான உற்பத்திகளை முழுமையாக தடை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இதன்போது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அதிகரித்த வெப்பநிலை; நாட்டில் ‘எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் கடும் வெப்பமான வானிலை குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை (28) மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டியானது (Heat Index) சில இடங்களில் ‘எச்சரிக்கை மட்டத்திற்கு’ (Caution Level) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தசைப்பிடிப்புக்கு (Heat cramps) வழிவகுக்கும் என்றும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் போதியளவு நீரை அருந்துமாறும், கடினமான வெளிப்புற வேலைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

மோடி – அநுரவுக்கு இடையிலான பேச்சு எரிபொருளுடன் நாளை வரும் கப்பல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28) நாட்டிற்கு எரிபொருள் கப்பல் ஒன்று கிடைக்கவுள்ளது. 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய இந்தக் கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மற்றுமொரு கட்டமாக இந்த எரிபொருள் கையிருப்பு அமைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு உறுதுணையாக அமைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மத்திய கிழக்கு போர்: வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை விசேட கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (26) வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது. வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். யுத்த சூழலால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வாழும் இலங்கைத் தொழிலாளர்களுடன் மிகவும் முறையான மற்றும் தொடர்ச்சியான தொடர்பாடலைப் பேணுவதன் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது. வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான கொள்கை முடிவுகளைச் சரியாக நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. வெளிநாடு செல்லும் பெண்களுக்கான குடும்பப் பின்னணி அறிக்கைகளை (Family Background…

மேலும் படிக்க