அண்மை செய்தி தாயகச் செய்தி 

தந்தை செல்வநாயகத்தின் 128 ஆவது ஜனன தினம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 128 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு இன்று (31)மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்தது இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர மேயர் க. செல்வராசா (சுப்ரா), உப்பு வெளி பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளைத்தம்பி சுரேஷ், தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளர் வி. விஜய குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர் இதேவேளை,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் பிறந்தநாள் நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையின் எதிர் கால அபிவிருத்தி க்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்குமென, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ட்ரூ பெற்றிக்  தெரிவித்தார்.பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்  சந்தனஅபயரத்ன  மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெற்றிக்  ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல், அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்தும் வகையில், இந்த சந்திப்பு இடம் பெற்றது.பல்வேறு நெருக்கடியான காலங்களில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை அமைச்சர் இச்சந்திப்பில்,பாராட்டினார். அத்துடன் நாட்டின் பல அபிவிருத்தித் துறைகளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.இலங்கையின் தற்கால அரச சேவை கட்டமைப்பிலுள்ள பழைய முறைகளுக்குப் பதிலாக, அவை நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் சீரமைக்கப்பட வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.இதற்கான மனிதவளப் பயிற்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு முதியவர் சடலம்

யாழ்ப்பாணம் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (31) முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சடலமாக மீட்கப்பட்டவர் சுதுமலை பகுதியை சேர்ந்த 75 வயதான காசிப்பிள்ளை மதுருபாகன்) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த முதியவர் நேற்று (30) சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில்  இரண்டாம் நாளாக  இன்றும் அகழ்வுப் பணி

குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில்  இரண்டாம் நாளாக  இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் மக்களை ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி  நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் அவர்களின் முன்னிலையில் அகழ்வுப் பணி  நேற்று திங்கட்கிழமை (30.03.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த அகழ்வுப் பணி இரண்டாம் நாளாக இன்று செவ்வாய்கிழமையும்(31.03.2026) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.அகழ்வு இடம்பெறும் அவ்விடத்தில் இதுவரையில் எதுவித எலும்புக் கூடுகளும் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மின்சார கட்டணம் அதிகரிப்பு.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு அமைய, 13.56% மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது அதன்படி 0 – 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. இதற்கமைய 15 ரூபாய் மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்படுகின்றது. மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

சட்டவிரோத கடற் றொழில்களு க்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லை மீனவர்கள்; 

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லை மீனவர்கள்; சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றினை 30.03.2026இன்று ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் முன்னெடுத்துள்ள இந்த சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எதிரான கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் குறித்த தொடர்கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் என உரியதரப்பினர்களிடம் பலதடவைகள் முறையிட்டுள்ளபோதும் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சட்ட விரோத கடற் றொழில் செயற்பாடு களைக் கட்டுப் படுத்த அரசு வக்கற்றிருக் கின்றது; ரவிகரன்

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசு வக்கற்றிருக்கின்றது; கடற்றொழில் அமைச்சர் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. முல்லைத்தீவு உட்பட வடக்கு, கிழக்கு கடற்பரப்புக்களில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசுவக்கற்றிருப்பதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார். எனவே இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவில் 30.03.2026இன்று இடம்பெற்ற சட்டவிரோத தடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிரான கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமல்ல, வடக்கு கிழக்கிலுள்ள அனைத்துக் கடற்பரப்புக்களையும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் எமது அப்பாவி மீனவர்கள் மிக…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று இடம்பெற்றிருந்தது.இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறும், நீதி கோரிய பதாதைகளை தாங்கியவாறும் வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும், வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம் என்று கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் பலரும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

இலங்கை வந்தடைந்த இந்திய எரிபொருள் கப்பல்

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (IOC) எரிபொருள் கப்பல் ஒன்று நேற்று (29) காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. அந்தக் கப்பல் 18,000 மெட்ரிக் தொன் டீசலையும், 18,000 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோலையும் ஏற்றி வந்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஏ. ராஜகருணா உறுதிப்படுத்தினார். ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை டீசல் கையிருப்பு போதுமானதாக உள்ளது என்றும், 92 மற்றும் 95 ஒக்டேன் ரக பெற்றோல் விநியோகம் ஜூன் மாதம் வரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற இராஜதந்திர தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த எரிபொருள் ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது நிலவி வரும் எரிபொருள் விநியோக சவால்களுக்குத் தீர்வு…

மேலும் படிக்க
அண்மை செய்தி புலச் செய்திகள் 

மத்திய கிழக்கு போரில் கொல்ல ப்பட்ட அமெரிக்க தமிழ் இராணுவ வீரர்

மத்திய கிழக்கு போரில் அமெரிக்க இராணுவ வீரரான விசாகன் சத்தியமூர்த்தி என்ற தமிழ் இராணுவ வீரரும் கொல்லப்பட்டுள்ளார். ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து நடைபெறுகின்றது.இந்தப் போரில் முக்கிய தலைவர்கள், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 1993 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி அமெரிக்க இராணுவத்தில் இணைந்த விசாகன் சத்தியமூர்த்தி கடந்த 21 ஆம் திகதி மத்திய கிழக்கு யுத்தத்தில் உயிரிழந்துள்ளார். இவருடைய இறுதி கிரியைகள் ஏப்ரல் 2ஆம் திகதி மதியம் 1.00 மணியளவில் 950 S Sepulveda Blvd, Los Angeles, CA 90049, United States என்ற முகவரியில் அமைந்துள்ள Los Angels National Cemetory யில் நடைபெறவுள்ளதாக…

மேலும் படிக்க