இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள்

இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் இன்று (27) சப்ரகமுவ மாகாண பொலிஸ் மா அதிபரின் பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.இக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டார்.

இதன் போது பிரதி அமைச்சர் மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் வெகு விரைவில் தமிழ் அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்த நிலையிலே அமைச்சர் ஆனந்த் விஜயபால இப் பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் அதிகாரிகளை வெகு விரைவில் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார்.

அத்தோடு மலையக பகுதியில் உள்ள சட்ட விரோத மதுபானங்கள், மதுபான உற்பத்திகளை முழுமையாக தடை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இதன்போது இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

அன்மைச் செய்தி

Leave a Comment