தாயகச் செய்தி 

வவுனியா வடக்கில் தியாக தீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி  நினைவுதினம் இன்று (25) அனுஸ்டிக்கப்பட்டது.வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் தர்மலிங்கம் தனுசன்  தலைமையில் இடம்பெற்ற மேற்படி நினைவுதின நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்டக்கிளை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான சுசீலன், சரோஜாதேவி மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நினைவேந்தல் தீபம் ஏற்றப்பட்டதுடன் மலர் தூவி அஞ்சலியும் இதன் போது செலுத்தப்பட்டது

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானுக்கு 15 அம்சத் தீர்வுத் திட்டத்தை டொனால்ட் ட்ரம்ப்  அறிவித்து ள்ளார்.

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று (24) செய்தியாளர்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். போர் முடிவுக்கு கொண்டுவருதற்கான நடவடிக்கையில் ஈரானுக்கு ஒரு முக்கியமான சலுகையை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, அமெரிக்கா ஈரானுக்கு 15 அம்சத் தீர்வுத் திட்டத்தை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) ஆகியோர் முன்னெடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  அறிவித்துள்ளார். பகைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்காக ஈரானில் உள்ள சரியான நபர்களுடன் அமெரிக்கா பேசி வருவதாகவும், ஈரானியர்கள் ஒரு ஒப்பந்தத்தை…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய த்தில் பாரிய வெடிப்பு!

டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த பாரிய வெடிப்பைத் தொடர்ந்து வானில் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, வெடிப்புச் சத்தத்தினால் அருகில் உள்ள வீடுகள் கூட அதிர்வடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த வெடிப்புச் சம்பவத்தினால் இதுவரை உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை. ஆயினும், காற்றின் தரம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரத்தின் மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடமாட்டமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

கைப்பற்றப் பட்ட போதைப் பொருட் களை விரைவாக அழிக்க புதிய பொறி முறை ஜனாதிபதி!

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அழிப்பதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். இதற்காக முறையான பொறிமுறையொன்றை உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்தச் செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்கான சட்டத் திருத்த வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்கு எடுக்கும் காலத்தை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இச்செயல்முறையின் போது நீதிமன்றம், பொலிஸ் மற்றும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

200 மில்லியன் டொலர் களை உடனடியாக வழங்கு வதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்    ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலர்களை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கண்டா (Masato Kanda) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பது குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ‘டித்வா’ அனர்த்த…

மேலும் படிக்க