மாவிலாறு பகுதியில் வெடிக்காத நிலையில் , 60mm ரக மோட்டார்
திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர காவல் பிரிவிற்கு உட்பட்ட மாவிலாறு பகுதியில் வெடிக்காத நிலையில் , 60mm ரக மோட்டார் குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளது.மாவிலாறு குளத்தின் இன்று (28.03.2026) புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீதிமன்ற அனுமதியைப் பெற்று குறித்த மோட்டார் குண்டுகளை விசேட அதிரடிப்படையின் ஊடாக செயலிழக்கச் செய்யவதற்கான மேலதிக ஏற்பாடுகளை சேருநுவர காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

