உலக அரசியல். கட்டுரை 

உச்சக்கட்டத்தை எட்டிய மத்திய கிழக்கு: பொய்முகமூடி குற்றச்சாட்டுகள், பிராந்தியப் போர் அபாயம்

உச்சக்கட்டத்தை எட்டிய மத்திய கிழக்கு: பொய்முகமூடி குற்றச்சாட்டுகள், ஏவுகணை தேய்வு மற்றும்பிராந்தியப் போர் அபாயம் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் 03/02/2026 ⊰❉⊱══════════════════⊰❉⊱ ராஸ் தனூரா தாக்குதல்: பொய்முகமூடிச் சதியா? அல்லது நிழற்போரின் ஒரு கட்டமா? சவூதி அரேபியாவின் ராஸ் தனூரா எண்ணெய் வசதிகள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், மத்திய கிழக்கில் புதிய புவிசார் அரசியல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இவ்வசதி, சவூதி அரசின் எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ (Saudi Aramco) மூலம் இயக்கப்படுகிறது. ஈரானுக்குள் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்களிலிருந்து பிராந்திய கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில், இது இஸ்ரேல் மேற்கொண்ட “பொய்முகமூடி” (False Flag) நடவடிக்கை என ஈரான் இராணுவ அதிகாரி ஒருவர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

செம்மலை பெரிய குளக்கட்டுகுளம் உடைப்பு கமநல உதவி ஆணையாள ருக்கு நேரில் காண்பித்த ரவிகரன் எம்.பி;

செம்மலை பெரியகுளக்கட்டு குளம் உடைப்பெடுத்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கமநல உதவி ஆணையாளருக்கு நேரில் காண்பித்த ரவிகரன் எம்.பி; சீரமைப்பை துரிதப்படுத்தவும் வலியுறுத்து. முல்லைத்தீவு – செம்மலையில் உள்ள பெரியகுளம் உடைப்பெடுத்துள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்களை முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 27.02.2026அன்று நேரில் அழைத்துச்சென்று காண்பித்துள்ளார். அத்தோடு உடைப்பெடுத்துள்ள குறித்த குளத்தினை விரைந்து சீரமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கமநல உதவி ஆணையாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – செம்மலைப்பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்தத 22.02.2025அன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நாடாத்தியிருந்தார். குறித்த மக்கள் குறைகேள் சந்திப்பில் முல்லைத்தீவு – செம்மலை கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள பெரியகுளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதாக அப்பகுதி மக்களால்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர உதவிப் பிரிவு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம் இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர உதவிப் பிரிவை அமைத்துள்ளது.மத்திய கிழக்கில் வாழும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதே இந்த பிரிவின் முக்கிய நோக்கமாகும். இலங்கையர்கள் மட்டுமின்றி, இலங்கையில் உள்ள வெளிநாட்டு பிரஜைகளும் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தீவிர பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு மிக உயர்ந்த முன்னுரிமை வழங்குகிறது. தொடர்பு விபரங்கள் இந்த அவசர உதவிப் பிரிவு வார இறுதி நாட்கள் உட்பட தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும். தொலைபேசி எண்கள்: +94 117…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானப் பயணங்கள் ரத்து

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று பெருமளவிலான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன இன்றைய நாள் (03 03 2026): மொத்தம் 57 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இலங்கையிலிருந்து புறப்படவிருந்த 28 விமானங்கள்  மற்றும் இலங்கையிலிருந்து புறப்படவிருந்த 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன  (04 03 2026): நாளை புதன்கிழமை திட்டமிடப்பட்டிருந்த 04 விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன மத்திய கிழக்கு நாடுகளுக்கான மற்றும் அந்தப் பிராந்தியத்தினூடாகப் பயணிக்கும் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்கவெல்ல இது குறித்துக் கூறுகையில்: பாதுகாப்பு கருதி இந்தத் தற்காலிக ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒரு சில விமானங்கள் மட்டும் அந்தப் பிராந்தியத்தினூடாகப் பயணித்துள்ளன.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காங்கேசன் துறைக்கும் நாகபட்டினத்து க்கும் இடையிலான கப்பல் சேவை

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் கப்பல் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் வழமைபோல் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் குறித்த கப்பல் சேவையானது இடம்பெறும். www.sailsubham.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவுசெய்துகொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சாவகச்சேரியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோம்

யாழ்பாணத்தில்  தொடர்ந்தும் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில் நேற்றைய தினம் ஒரு தொகை லாப்ஸ் (Laugfs) எரிவாயு சிலிண்டர்கள் சாவகச்சேரியில் உள்ள யாழ் மாவட்ட முகவர் நிலையத்தில் நேரடியாக விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் வரிசையில்  முண்டியடித்து பெற்றுக்கொண்டனர்.இந்நிலையில் ஈரான் எடுத்துள்ள அதிரடி முடிவுகளால் இயற்கை எரிவாயுவின் (LNG) விலை சர்வதேச சந்தையில் செங்குத்தாக உயரத் தொடங்கியுள்ளது. உலக இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை (20%) கொண்டுள்ள கத்தார், தனது ஏற்றுமதிக்கு இந்த ஹோர்முஸ் நீரிணையையே பெரிதும் நம்பியுள்ளது.கத்தாரின் முக்கிய வாடிக்கையாளர்கள் ஆசியாவில் இருந்தபோதிலும், இந்த விநியோகத் தடையால் உலகெங்கிலும் உள்ள நாடுகள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ளப் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.இது சந்தையில் தேவையற்ற தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேலில் உள்ள சில முக்கிய எரிவாயு உற்பத்தி…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில், நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், குவைத், லெபனான், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் இவ்வாறு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில்  ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் மீது இரண்டு ஆளில்லா வானூர்திகள் தாக்கியுள்ளன. இதன் விளைவாக சிறு அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன் கட்டடத்திற்கு சிறிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டதாக சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.இதேவேளை ஈரான் மீது கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டுவீச்சுத் தாக்குதல்களைத் தொடங்கியதை…

மேலும் படிக்க