சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மாணவர் களுடன் தொடர்ந்து பயணிப் போம்.சட்டத் தரணி மணிவண்ணன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கிக் கறுப்புக் கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினைத் தெரிவித்து, அவர்களுடன் தொடர்ந்து பயணிப்போம் எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். கறுப்புக் கொடியேற்றப்பட்ட விடயம் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் சுமார் 5 மணி நேரம் வியாழக்கிழமை (19) விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளை, அவர்களுக்கான சட்டப் பிரதிநிதித்துவத்தை மூத்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் வழங்கி இருந்தார். மாணவர்கள் மீதான பொலிஸாரின் விசாரணைகள் முடிவுற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமான செயற்பாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களாகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அது அவர்களின் உணர்வுபூர்வமான விடயம். அது மாத்திரமின்றித் தமிழ் மக்களின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

உள்ளம் அஞ்சாது நின்றால் உடல் ஒரு தடையல்ல” – சிறீதரன் எம்.பி

உள்ளம் அஞ்சாது நின்றால் உடல் ஒரு தடையல்ல” – செவிப்புலன் வலுவற்றோர் விழாவில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு….! செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் (ROOD) 44 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக்கூட்டமும் அண்மையில் (2026/03/07) யாழ்ப்பாணம், கலட்டியில் அமைந்துள்ள அமையத்தின் தலைமைக் காரியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். ​இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், “உலகம் சத்தங்களால் நிறைந்தது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், மௌனத்திற்கு ஒரு வலிமையான மொழி உண்டு என்பதை உங்கள் கண்கள் எனக்கு உணர்த்துகின்றன. ‘செவிப்புலன் அற்றவர்கள்’ என்பது உங்களின் குறைபாடு அல்ல; அது ஒரு தனித்துவமான ஆற்றல். சத்தமில்லாத உலகில் நீங்கள் கட்டியெழுப்பும் அன்புக்கும் கலைக்கும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஏப்ரலில் நாட்டுக்கு வரும் எரிபொருள் கப்பல்கள்; மின்சாரம், போக்குவரத்துக்கு தடையில்லை! ஜனாதிபதி

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற அழிவுகரமான ஊழல்களுக்கு ‘உடனடி கொள்வனவு’ (Spot Purchases) முறையே பிரதான காரணமாக இருந்தது. இதனைத் தவிர்க்கவே, தாம் ஆட்சிக்கு வந்தது முதல் நீண்டகால விலைமனு மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலான (G2G) ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற நாடுகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் மற்றும் இந்திய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகத்தில் எவ்வித நெருக்கடியும் இல்லை, மசகு எண்ணெய் (Crude Oil) இறக்குமதியிலேயே சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது. புஜேரா (Fujairah) துறைமுகத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக, மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த 90,000…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

எரிபொருள் நெருக்கடிக்கு அரசே பொறுப்பு – ரவிகரன் எம்.பி

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு அரசே பொறுப்பு – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு; புதன் சிக்கன விடுமுறை தொடர்பிலும் கேள்வி எழுப்பினார் அரசு எரிபொருளுக்கான சடுதியானகேள்வி அதிகரிப்பைக் கட்டுப்படுத்த தவறியதன்மூலம் நிகழ்ந்த எரிபொருள் பதுக்கல்களாலேயே, தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்று உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்த நெருக்கடி நிலைக்கு அரசே பொறுப்பெனவுத் தெரிவித்துள்ளார். அத்தோடு ஒரு வாரத்திற்குரிய 20சதவீத மனித உழைப்பினை இழந்து, வெறுமனே 02சதவீத எரிஎண்ணெயை மிச்சப்படுத்தும்வகையில் அமைந்துள்ள புதன் சிக்கன விடுமுறை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் 20.03.2026இன்று இடம்பெற்ற உலகில் தற்போது நிலவும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார், இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பெரும் நெருக்கடி க்கு உள்ளாகி யுள்ள வடக்கு கடற்றொழி லாளர்கள் நா.வர்ணகுல சிங்கம்

உள்ளூர் இழுவைமடி மற்றும் எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களின் ரோலர்களால் தொடர்ந்தும் வடக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகண கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதியான நா.வர்ணகுலசிங்கம் குறிறம் சுமத்தியுள்ளார். அவர் நேற்று(20.03.2026) தனது இல்லத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் சகல தடை செய்யப்பட்ட கடற்றொழில்களும் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற போதும் யாழ்ப்பாணத்தில் நீதியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்துவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இந்திய இழுவை மடி படகுகள் உற்பத்தி இடங்களை அழித்து நாசம் செய்கின்ற போதும் அதை விட அதிகமாக தற்போது உள்ளூர் இழுவைமடி படகுகள் மீன் உற்பத்தி இடங்களை அழித்து உறப்பத்தியை இல்லாமல் செய்வதாகவும் குறிப்பட்டுள்ளார்.தற்போதும் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கடல் பகுதிகளில் சட்ட விரோத…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

திருகோண மலையில் வெற்றுக் காணியி லிருந்து வெடிக்காத நிலையில் மிதிவெடி

திருகோணமலையில் வெற்றுக்காணியிலிருந்து வெடிக்காத நிலையில் மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.மூதூர் காவல் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் – அப்ரார்நகர் பகுதியில் இருந்தே இந்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது.குறித்த நடவடிக்கை நேற்று (19-03-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இம்மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.இம்மிதிவெடியில் ஜொனி என்றும் தமிழீழம் என்றும் தமிழில் எழுதப்பட்டுள்ளது.யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் இம்மிதிவெடி புதைக்கப்பட்டிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது. இம்மிதிவெடியானது மூதூர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

இலங்கை உள்ளூராட்சிப் பிரதிநிதிகளுக்கு இந்தியாவில் விசேட பயிற்சி

இலங்கை தமிழ் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகங்களின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் 30 பேருடனான இரண்டாவது குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் நடைபெற்ற 10 நாள் ஆளுமை விருத்தி செயல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இந்த செயல் திட்டமானது தெலுங்கானா மற்றும் தமிழ் நாடு ஆகிய இரு மாநிலங்களில் மார்ச் 9-18 வரை நடைபெற்றது. இக்குழுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த 20 பிரதிநிதிகளும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த 10 பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டிருந்தனர். குறித்த நிலையத்தில் 2026 ஜனவரி 19-29 வரை முதல் தொகுதி 20 உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆளுமை விருத்தி செயல்நெறியில் பங்கேற்றிருந்தனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஏற்றுமதிக்கு முன்னு ரிமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசு அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இத்துறையின் பிரதான ஏற்றுமதியாளர்கள் மற்றும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் நேற்று  பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இங்கு குறிப்பாக ஏற்றுமதித் துறைக்கும், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார். தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து, உருவாகியுள்ள சூழ்நிலையை முகாமைத்துவம் செய்வதற்காக ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இத்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அது…

மேலும் படிக்க