சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இன ஒடுக்குமுறைக்கு எதிராக வீறு கொண்டு களமாடியவர், நல்லகண்ணு! கவிஞர் காசி ஆனந்தன்

இன ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போர்க்களத்தில் வீறு கொண்டு களமாடியவர், நல்லகண்ணு! கவிஞர் காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி!! சென்னை, பிப். 26   ‘பொதுவாழ்வில் தூய்மையாக வாழ்ந்த பொதுவுடைமையாளரை இழந்தோம். நெஞ்சம் நிமிர்த்தி உரிமை இழந்தோர் விடியலுக்காய் நெருப்பை எரிந்து வெடித்த தீப்பந்தமாய் அணைந்தது. வீறு கொண்ட தலைவராய் வாழ்ந்து ஆண்டுகள் நூறு கண்ட வீரவேங்கை விழி மூடியது. உலக விடுதலையாளர் நல்லகண்ணு ஐயா உயிர் மூச்சை நிறுத்தினார்.’ இவ்வாறு தமிழீழ நட்புறவு மையத்தின் தலைவர் காசி ஆனந்தன், நல்லகண்ணு ஐயா மறைவுக்குறித்த தனது இரங்கல் அஞ்சலியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் பதிவு செய்திருப்பதாவது:- நல்லகண்ணு ஐயாவின் முதலானிய ஒடுக்குமுறைக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள்-உழவர் போராட்டங்கள் – உயர் சாதிக்காரர்களின் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சாதி ஒழிப்புப் போராட்டங்கள் – ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

எரிசக்தி, இறையாண்மை மற்றும் தடைகள்: ஐரோப்பாவின் புதிய எண்ணெய் எல்லைப்போர்

எரிசக்தி, இறையாண்மை மற்றும் தடைகள்: ஐரோப்பாவின் புதிய எண்ணெய் எல்லைப்போர் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்று ஆய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ✦. துருஷ்பா குழாய் வழி: நட்பிலிருந்து நெருக்கடிக்குள் சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட Druzhba pipeline (Friendship Pipeline) இன்று ஐரோப்பிய அரசியல் மோதலின் மையநரம்பாக மாறியுள்ளது. உலகின் நீளமான எண்ணெய் குழாய் வலையமைப்புகளில் ஒன்றான இது, ரஷ்ய கச்சா எண்ணெயை மத்திய ஐரோப்பாவுக்கு — குறிப்பாக ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு — கொண்டு செல்கிறது. ரஷ்யா–உக்ரைன் போர் தீவிரமடைந்த நிலையில், இந்த குழாய் வழி எண்ணெய் ஓட்டம் குறித்த சர்ச்சை, தொழில்நுட்ப பிரச்சினையைத் தாண்டி புவிசார் அரசியல் மோதலாக மாறியுள்ளது. ✦. ஹங்கேரியின் நிலைப்பாடு: இறையாண்மை முன்னுரிமை ஹங்கேரி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ரூ. 500 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் கைது

ரூ. 500 மில்லியனுக்கும் (ரூ. 50 கோடி) அதிகமான தெரு மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (27) பிற்பகல் அஹுங்கல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, 3 வெவ்வேறு சுற்றிவளைப்புகளில், பலபிட்டிய மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 13.032 கி.கி. ஐஸ் மற்றும் 14.112 கி.கி. ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார். இவர்களில் கைது செய்யப்பட்ட 41 வயதான, அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த பெண்ணிடமிருந்து 9 மி.மீ. பிஸ்டல் வகை கைத்துப்பாக்கிக்கான 30 தோட்டாக்களும், 3.8 மி.மீ, வகை துப்பாக்கிக்கான 30 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்..கைதான இரு சந்தேகநபர்களும் 41, 45 வயதுடைய பலபிட்டிய, அம்பலாங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டு களுவாஞ்சிகுடியில் உழவு இயந்திரத்தின் மேல் ஏறி நின்ற டிப்பர்

மட்டு களுவாஞ்சிகுடியில் உழவு இயந்திரத்தின் மேல் ஏறி நின்ற டிப்பர் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் சற்றுமுன் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மட்டு கல்முனை சாலை வழியே பழுதான டிப்பர் ஒன்றை உழவு இயந்திரம் ஒன்று கட்டி இழுந்துக்கொண்டு சென்ற சமயம் உழவு இயந்திரத்தின் மேல் எதிர்பாராத விதமாக டிப்பர் ஏறியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது விபத்து நடைபெற்ற போது உழவு இயந்திர சாரதி கீழே குதித்து தெய்வாதினமாக உயிர்தப்பியுள்ளார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி காவல் துறையினர். மேற்க்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கு மற்றும் கிழக்கில். இடம்பெற்று வரும் நில அபகரிப்பு, நோர்வே அரசு ஆழ்ந்த கவலை

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நோர்வே அரசு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. அத்துடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட விடயங்களில் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் நோர்வே வலியுறுத்தியுள்ளது. நோர்வே நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற விசேட விவாதத்தின் போதே நோர்வே வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஐடே இதனைத் தெரிவித்தார். நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்ஷாயினி குணரத்னம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது:- “2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் இலங்கையில் ஒரு புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கின் பெரும் நீர்ப்பாசனத்தை நசுக்கப் பெரும் சதி – இரணைமடு விவசாயிகள் அமைப்பு போர்க்கொடி!

வடக்கின் பெரும் நீர்ப்பாசனத்தை நசுக்கப் பெரும் சதி – இரணைமடு விவசாயிகள் அமைப்பு போர்க்கொடி! வடக்கின் பெரும் நீர்ப்பாசனமான இரணைமடு நீர்ப்பாசனத்தின் கீழ் இருக்கும் 28 கமக்காரர் அமைப்புகளின் மீது அர்ச்சுனா எம்.பி கூறும் குற்றச்சாட்டுக்களில் உண்மைகள் இல்லை என்று கூறும் கமக்காரர் அமைப்புகளின் தலைவர், குறித்த எம்.பி உண்மைகளை ஆராயாது அரசியல் கதிரையின் மீது கொண்ட ஆசை காரணமாக ஒருதலைப் பட்சமாக கருத்துக் கூறுவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் -கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது இரணைமடு கமக்கார அமைப்புக்களின் நிர்வாகம் பெரும் நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும்,பதிவு செய்யப்படாத அமைப்பு என்றும், பல்வேறு குற்றச்சாட்டுக்களை அர்ச்சுனா எம்.பி முன்வைத்திருந்தார்.அவர் குறித்த கருத்தை கூறும் முன்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குஞ்சுக்கால் வெளியில் உப்பளம் அமைக்க முயற்சி நிறுத்திவைக்க நடவடிக்கை!

குஞ்சுக்கால்வெளியில் பெரும்பான்மை இனத்தவர்கள் உப்பளம் அமைக்க முயற்சிக்கும் தமிழர்களின் பூர்வீக்காணிகளை மீட்டுத்தர ரவிகரன் எம்.பி வலியுறுத்து; பிரச்சினைக்கு தீர்வுகாணும்வரை உப்பளம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்திவைக்க நடவடிக்கை – மாவட்டசெயலர் தெரிவிப்பு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களால் உப்பளம் அமைக்க முயற்சிக்கப்படும் காணிகள், தமிழ் மக்களின் அறுதி உறுதி தனியார் காணிள் எனவும், அந்தக்காணிகள் மீட்கப்பட்டு காணிகளுக்குரிய தமிழ் மக்களிடமே கையளிக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கொக்குத்தொடுவாய் கிராமமக்களால் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரனிடம் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், காணி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எழுத்துமூலக் கோரிக்கை மற்றும் காணி ஆவணங்களின் பிரதியைப் பெற்றுக்கொண்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும்வரை உப்பளம் அமைக்கும் முயற்சிகளை நிறுத்திவைக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தம்மால் கடிதம் அனுப்பப்படுமெனவும், இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் அந்தப்பகுதியில் எந்தச்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

ஈழத்தின் கிளிநொச்சி அக்கராயனில் நடந்தேறிய ‘ஏர் நிலம்’ உழைப்பாளர் மதிப்பளிப்பும் பொங்கல் விழாவும்

ஈழத்தின் கிளிநொச்சி அக்கராயனில் நடந்தேறிய ‘ஏர் நிலம்’ உழைப்பாளர் மதிப்பளிப்பும் பொங்கல் விழாவும். ‘எனது எழுபத்தெட்டாவது வயதில் கிடைத்த இந்த மதிப்பளிப்பு எனக்குள் உழைப்பின் காலத்து நினைவினை விதைத்தது’ என்று சொன்னார் மதிப்பளிப்பினை பெற்றுக் கொண்ட மூத்த விவசாயி ஒருவர் ‘ஏர் நிலம்’ தொண்டமைப்பின் ஊடாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்ற மூத்த உழைப்பாளர்கள் மதிப்பளிப்பும் பொங்கல் விழாவும் நிகழ்வானது 2026 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் கந்தபுரத்தில்அமைந்துள்ள இலக்கம் 01 அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. ‘ஏர் நிலம்’ தொண்டமைப்பும், அக்கராயன் பிரதேச பொது அமைப்புகளும் இணைந்து இந்த நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்தன. ஏற்கனவே முறிகண்டி தருமபுரம், மாங்குளம், கற்சிலைமடு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்நிகழ்வு இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்விற்கு ‘ஏர் நிலம்’ தொண்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட செயலாற்றுநர் கவிஞர் யே.லக்சிதரன் தலைமை வகித்தார்.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வவுனியா அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூ. 950 மில்லியன் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூ. 950 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவரும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ், வவுனியா நகர அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ. 250 மில்லியனும், பிரதேச அபிவிருத்தியின் கீழ் 36 வீதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 250 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் உள்ள 9 பெரிய பாலங்களைப் புனரமைப்பதற்காக ரூ. 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.   மேலும், 500 மீற்றருக்கும் குறைவான நீளத்தைக் கொண்ட 21 கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ரூ. 350 மில்லியன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.   இந்தக் கூட்டத்தின் போது,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குஞ்சுக்கால் வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களின் சட்டவிரோத உப்பளம்

குஞ்சுக்கால் வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களின் சட்டவிரோத உப்பளம் அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினார் ரவிகரன் எம்.பி; மாலை 03.00மணிக்கு முல்லை மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் பெரும்பான்மையினத்தவர்களால் சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கும் முயற்சியொன்று 27.02.2026இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கொக்குத்தொடுவாய்ப் பகுதி தமிழ் மக்கள், சட்டவிரோதமாக உப்பளம் அமைக்க முற்பட்ட பெரும்பான்மையினத்தவர்கள், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் பங்கேற்புடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 27.02.2026இன்று மாலை 03.00மணிக்கு கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின்…

மேலும் படிக்க