தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டக்கப்பில் கிணற்றி லிருந்து பெண் உயிருடன் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்காரைப் பிரதேசத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, அதே கிணற்றிலிலிருந்து உயிருடன் மேலும் பெண்ணும் மீட்கப்பட்டள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் அவரது பிள்ளையுடன் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் (19) சென்றவர் வெள்ளிக்கிழமை காலை வரைக்கும் வீடு திபியிருக்கவில்லை.இந்நிலையில் நேற்று (20) காலையில் சிறிய பிள்ளை ஒன்று அப்பகுதியிலுள்ள வயற் பகுதியில் அழுது கொண்டு இருந்த நிலையில் வழியால் சென்றவர்களல் அப்பிள்ளை மீட்கப்பட்டுள்ளது. அப்பிள்ளையின் தாயை கண்டுபிடிக்காத நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள வயல்வெளியில் அமைந்திருந்த பாழ்ங் கிணற்றில் இருந்து குற்றுயிராய் அத்தாய் தாய் உயிருடன் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அந்த தாய் அணிந்திருந்த தாயின் தாலிக்கொடி களவாளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் பல்கலைக் கழகத்தின் பெண் விரிவுரையாளர் அடித்துக் கொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், விரிவுரையாளரான தனது தாயையும் தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவுரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இதுகுறித்து விசாரணை செய்வதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி சான்றும் காணப்பட்டுள்ளது.இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்திருந்தமை தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த எரிபொருள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் சரசாலை கனகம்புளியடி பகுதியில் வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு.

யாழ்.சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.இதன்போது முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளனர். அவர்களுள் தாயும் மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு சாரதியும், பிறிதொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையீல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் வட்டுக் கோட்டை பிரதேச வைத்திய சாலைக்கு முன்பாக, பொது மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்,

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் இன்றையதினம் அமைதியான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம், குறித்த வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன், பொதுமக்கள், நோயாளிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வைத்தியசாலையில் போதுமான கட்டட வசதிகள் இருந்தபோதிலும், தற்போது இரு வைத்தியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர் என்றும், ஒரு தாதியர் கூட நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், முன்பு 24 மணி நேர சேவை வழங்கப்பட்ட இந்த வைத்தியசாலை, தற்போது அந்த சேவையை இழந்துள்ளதாகவும், நோயாளர் விடுதி இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதேபோல், வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) காரைநகர் வைத்தியசாலைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதனால், வட்டுக்கோட்டை மற்றும்…

மேலும் படிக்க