சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கிய அதே இராணுவத்திடம் எரிபொருளை நிரப்ப முடியாது;

இராணுவத்தின் படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கிய விவகாரங்களுக்காக நீதிகோரும் எம்மால், அதே இராணுவத்திடம் எரிபொருளை நிரப்ப முடியாது; நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ரவிகரன் எம்.பி கடிதம் இறுதிப் போர் காலப்பகுதியில் இராணுவப் பொறிமுறைக்குள் நம்பி ஒப்படைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பத்து ஆண்டுகளைக் கடந்து தேடிக்கொண்டும், இறுதிப்போரில் இதே இராணுவக்கட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான நீதிக்காகவும் நீதிக்கான சர்வதேச தலையீட்டுக்காகவும் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கும் தம்மால், இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலைங்களில் எரிபொருளை நிரப்ப முடியாதெனவும், மாற்று ஏற்பாட்டச் செய்யுமாறும் வலியுறுத்தி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு 22.03.2026இன்று கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவத்தினரால் நிருவகிக்கப்படும் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கப்படும் ஏற்பாடு குறித்து அண்மையில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின்…

மேலும் படிக்க