உலக அரசியல். கட்டுரை 

போர் முரசு பலமாக ஒலிக்கிறது: வளைகுடா எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ஈரானின் அச்சுறுத்தல்

போர் முரசு பலமாக ஒலிக்கிறது: வளைகுடா எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ஈரானின் அச்சுறுத்தல் பிராந்திய பேரழிவின் நிழலை ஏற்படுத்துகிறது அமெரிக்கா–ஈரான் மோதலில் ஒரு பயங்கரமான புதிய கட்டம்: அணுசக்தி, எரிசக்தி, நீர் மற்றும் சிவிலியன் உள்கட்டமைப்புகள் நேரடியாக இலக்குகளாக மாற்றப்பட்டுள்ளன ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ மத்திய கிழக்கில் உருவாகிக் கொண்டிருக்கும் தற்போதைய பதற்றநிலை, வழக்கமான இராணுவத் தாக்குதல்களின் கட்டத்தைத் தாண்டி, மிக ஆபத்தான ஒரு புதிய பரிமாணத்துக்குள் நுழைந்துள்ளது. ஏற்கனவே தீவிரமாகிக் கொண்டிருந்த அமெரிக்கா–ஈரான் மோதல், இப்போது வளைகுடா பிராந்தியத்தின் முக்கியமான சிவிலியன் உள்கட்டமைப்புகளையே நேரடி அச்சுறுத்தலின் மையமாக மாற்றியுள்ளது. ஈரானின் மின்சார அமைப்புகளை அமெரிக்கா தாக்கினால், அதற்கு பதிலடியாக மின் நிலையங்கள், கடல்நீரை குடிநீராக்கும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பதில் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி சூரியப்பெரும  தெரிவித்துள்ளார். கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்தநிலையில், இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒருநாள் சேவை, ஏனைய அனைத்துப் பொதுச் சேவைகள் இன்று முற்பகல் 11.00 மணி முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. இன்றைய தினம் முதல் தங்களது அடையாள அட்டைத் தேவைகளுக்காக திணைக்களத்தை அணுக முடியும் எனவும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி சூரியப்பெரும தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வன்னியில் முழுமைப் படுத்தப் படாதுள்ள வீடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய – ரவிகரன்

வன்னியில் முழுமைப்படுத்தப்படாதுள்ள வீடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய – ரவிகரன் எம்.பி; மூன்று வருடங்களுக்குள் அனைத்து வீடுகளையும் முழுமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதி அமைச்சர் – டி.பி.சரத் பதில் கடந்த நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு இடைநடுவே கைவிடப்பட்டுள்ள வீடுகள் தொடர்பாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி.சரத்திடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியதுடன், குறித்த வீடுகளை முழுமைப்படுத்த விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் முழுமைப்படுத்தப்படாத அனைத்து வீடுகளையும் கட்டி முடிப்பதற்குமான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளதாகவும், ஒரு முறையான வேலைத்திட்டத்தின்மூலம் இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி.சரத் இதன்போது பதிலளித்துள்ளார். கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இந்திய இலங்கை வெளியுறவு அமைச்சர் இடையே விசேட கலந்துரை யாடல்

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், பிராந்திய பதற்றங்களின் பின்விளைவுகள் மற்றும் அவற்றின் விரிவான தாக்கங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கை மற்றும் “மகாசாகர் தொலைநோக்கு” முயற்சிக்கு தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

மாலை 6.00 மணி – இரவு 10.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி, அவர்களின் பங்களிப்புடன் நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் எதிர்நோக்கியுள்ள வலுசக்தி விநியோகத்திலான சவால்களுக்கு மத்தியில், வலுசக்தியைச் சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்தி நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அதிகபட்ச பங்களிப்பை வழங்குவது, நிறுவன ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் தற்போது அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்பாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காக தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் சேதம்

கனடாவின் பிராம்ப்டன், சின்குவாசி பூங்காவில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாச்சலம் மற்றும் கனடியத் தமிழர் தேசிய அவை கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி அதிகாலையில் இந்த நினைவுச்சின்னத்தின் பிரதான மேடை மற்றும் நினைவுப் பலகைகள் வர்ணங்கள் பூசப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளன. இந்தச் செயல் அருவருப்பானது எனக் குறிப்பிட்டுள்ள விஜய் தணிகாச்சலம், இது ஒட்டுமொத்த ஒன்ராறியோ தமிழ் மக்களின் அடையாளம் மற்றும் வரலாற்றின் மீதான நேரடித் தாக்குதல் எனச் சாடியுள்ளார். வெறுப்புணர்வும் மற்றும் இனப்படுகொலையை மறுக்கும் போக்கும் ஒன்ராறியோவில் இடம்பிடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்லவென்றும் கடந்த 2025ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களிலும் இதேபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்த நிலையில் இது திட்டமிட்ட ஒரு சதி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பாடசாலையின் முக்கிய நிகழ்வுக்கு அரசியல் கட்சி பிரமுகர் எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள்

கரவெட்டியில் நீண்ட வரலாற்று பாரம்பரியம் மிக்க பாடசாலையின் முக்கிய நிகழ்வுக்கு அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரை முதன்மை விருந்தினராக அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டு ஆரம்ப எதிர்பு காட்டப்படுள்ளது. பாடசாலையில் அரசியல் கலக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை. இதுவரை காலமும் இல்லாத ஒன்றை திணிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவே இந்த துண்டுப்பிரசுரங்களை நோக்க முடிகிறது. அரசியல்வாதிகளை தவிர்த்து பாடசாலை பழைய மாணவர்கள் அல்லது கல்வியியலாளர்கள் ஒருவரை அழைக்கவும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

உழவர் ஒன்றிய விளையாட்டுக உதைபந் தாட்டச் சுற்றுப் போட்டி

உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில்! உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நி லையமும் நடாத்தியஅமரர்களான விநாயகமூர்த்தி, புவனேஸ்வரி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். ​”ஒரு சமூகத்தின் உண்மையான பலம் அதன் இளைய சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் கலாசாரச் சீரழிவுகள் மற்றும் போதைப்பொருள் போன்ற சவால்களை முறியடிக்க விளையாட்டுத் துறை ஒரு தற்காப்புக் கேடயமாகச் செயல்படுகிறது. ​விளையாட்டு மைதானங்கள் என்பவை வெறும் போட்டிகளுக்கான இடங்கள் மட்டுமல்ல; அவை ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளைப் போதிக்கும் நவீனப் பள்ளிக்கூடங்கள். எனவே,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

யாழ். சுன்னாகம் பகுதியில் தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயம்

யாழ். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்வம் நேற்று(23.03.2026) இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு உடுவில் – மல்வம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவருடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். பின்னர் அங்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவியை விட்டுவிட்டு இணுவில் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் இதுகுறித்து கேட்பதற்காக அந்த பெண்ணின் உறவினர்கள் மூவர் இணுவில் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த நபருக்கும் பெண்ணின் உறவினர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு உள்ளே சென்ற நபர் புகையிலை வெட்டும் கத்தியை எடுத்து வந்து மூவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த தாக்குதலில் பெண் வீட்டை சேர்ந்த இருவர் படுகாயமடைந்ததுடன் மற்றையவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் அவர்களும் குறித்த…

மேலும் படிக்க