அண்மை செய்தி தாயகச் செய்தி 

இடமாற்ற முறைமைக்கு எதிராக ஆசிரியர்கள் யாழில் போராட்டம்

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையை மாகாண கல்வித் திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஆசிரியர்கள் அதற்கு எதிராக வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆசிரியர்கள் பலர் ஒன்று கூடி பல்வேறு வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு கோசம் எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர். இவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் மாகாண கல்வி திணைக்களத்திற்கு மேல் முறையோடுசெய்தும் அந்த முறையிட்டினை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு மாகாண கல்வி திணைக்களம் வழங்கவில்லை எனவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சிலர் வடமாகண பொதுச்சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளர் ஆழ்வார்பிள்ளை ஸ்ரீயைச் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து குறித்த ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். தமது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கொலைக் குற்றவாளி களுக்குத் துணை ; மட்டக்கள ப்பில் போராட்டம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும் குறித்த சம்பவத்திற்கு நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் கொக்கட்டிச்சோலை நகரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமாரன் தலைமையில் மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்கத்தின்  ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 20ம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரும், இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவமும், அத்துடன் தொடர்புபட்டதான கொலை விடயமும் கண்டுபிடிக்கப்பட்டு பிரதான சந்தேக நபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஐ.நா வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த தமிழ் பிரதிநிதிகள்

கடந்த ஒரு வாரகாலமாக வடக்கில் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி திரு.மார்க் அன்றி பிரான்சிக்கும்  தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் அமைந்துள்ள பொக்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இன்று காலை 9.15 – 10.15 வரை இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய செல்வராசா கஜேந்திரன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சருமான பொ.ஜங்கரநேசன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் சிரேஸ்ர சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை இலங்கைத் தமிழரசுக்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கணுக்கேணிக் குளத் தின் முதலாம் வாய்க் கால் சீரமைப்பிற்கு ரவிகரன் எம்.பியால் நிதி ஒதுக்கீடு

கணுக்கேணிக் குளத்தின் முதலாம் வாய்க்கால் சீரமைப்பிற்கு ரவிகரன் எம்.பியால் நிதி ஒதுக்கீடு முல்லைத்தீவு – முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்காலைச் சீரமைப்பதற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 350, 000ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறித்தபகுதிக்கு நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், அதனைத் தொடர்ந்தே குறித்த வாய்க்கால் சீரமைப்பிற்கு தனது இவ்வாண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவைநிலயப் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்கால் சீரின்றிக் காணப்படுவதால் அந்த வாய்காலின் கீழ் 51ஏக்கர் வரையில் நெற்செய்கை மேற்கொள்ளும் 28விவசாயிகள் தமது வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதில் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் முறையிட்டிருந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டிற்கமைய…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

பேரரசுகளின் மீது நெருப்பு: ஈரான், எதிர்ப்பு, மற்றும் மத்திய கிழக்கிற்கான மறைமுகப் போர்

பேரரசுகளின் மீது நெருப்பு: ஈரான், எதிர்ப்பு, மற்றும் மத்திய கிழக்கிற்கான மறைமுகப் போர் ஏவுகணைகள், நினைவுகள், மற்றும் புதிய பிராந்திய ஒழுங்கமைப்பின் உருவாக்கம் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ வெடிப்புப் புள்ளி: டெல் அவிவ் மீது ஏவுகணைகள் ஈரான்–இஸ்ரேல் மோதல், பல தசாப்தங்களாக நீடித்த நிழல் யுத்தத்தின் எல்லைகளைத் தாண்டி, இப்போது நேரடி மற்றும் பகிரங்கமான மோதலாக மாறியுள்ளது. ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் நடவடிக்கைகள் இந்த மாற்றத்தின் வெளிப்படையான சின்னங்களாக விளங்குகின்றன. ஈரானிய இராணுவப் பேச்சாளர் இப்ராஹிம் சோல்ஃபகாரி, கத்தாம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்திலிருந்து வெளியிட்ட அறிக்கையில், டெல் அவிவ், டிமோனா, எய்லாட் போன்ற முக்கிய நகரங்களையும், அமெரிக்க இராணுவ தளங்களையும் இலக்காகக் கொண்ட ஒருங்கிணைந்த…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

சிறீதரன் எம்பியை சந்தித்த ஐ.நா வதிவிடப் பிரதிநிதி:

சிறீதரன் எம்பியை சந்தித்த ஐ.நா வதிவிடப் பிரதிநிதி: வடக்கின் நிர்வாக இடைவெளி குறித்து விரிவான கலந்துரையாடல்! ​இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க் கிழமை(24/03/2026) அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமையத்தில் (IOM) நடைபெற்றது. ​இதன்போது, வடக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழல் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாததால் ஏற்பட்டுள்ள பாரிய நிர்வாக இடைவெளி மற்றும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சவால்கள் குறித்து ஐநாவின் வதிவிடப் பிரதிநிதிக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. ​குறிப்பாக, தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதிகாரப் பரவலாக்கல் சிதைவடைந்து, நிர்வாகக் கட்டமைப்புகளில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதை அவர் வலியுறுத்தியதோடு, யுத்தத்திற்குப்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இனி நினைத்தவுடன் கைது செய்ய முடியாது!- பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு #Police

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார்.அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டப்பிரிவுகளின்படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை மூலம் போரைத் தூண்டுதல், அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுதல் போன்ற காரணிகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்த பின்னரே ஒருவரைக் கைது செய்ய முடியும் எனப் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு ஒருவரைக் கைது செய்வதாக இருந்தால், அதற்கு முன்னதாகச் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, சட்டப் பிரிவின் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தி, முன்முயற்சியாக எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

அத்துமீறி பிரவேசித்த இந்திய கடற் றொழிலாளர்கள் 07 பேர் கைது

யாழ்ப்பாணம் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய கடற்றொழிலாளர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவுக்கு வடக்கே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.இந்திய கடற்றொழிலாளர்களின் 02 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கரைக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம், ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது.இதன்போது மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விதமான அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் மக்களது பிரச்சினைகளும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள நீலங்காடு காணி பிரச்சினை, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லைகள், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் தொடர்பான பிரச்சனைகள், குழாய்வழி குடிநீர் பிரச்சினை, பாடசாலைகளின் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காரைநகர் பிரதேச செயலர், திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், கடற்படையினர், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.மேலும் இன்றைய கூட்டமானது எந்தவிதமான குழப்பங்களும் இன்றி ஆரோக்கியமாக…

மேலும் படிக்க