இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள்

இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் இன்று (27) சப்ரகமுவ மாகாண பொலிஸ் மா அதிபரின் பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.இக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டார். இதன் போது பிரதி அமைச்சர் மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் வெகு விரைவில் தமிழ் அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்த நிலையிலே அமைச்சர் ஆனந்த் விஜயபால இப் பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் அதிகாரிகளை வெகு விரைவில் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார். அத்தோடு மலையக பகுதியில் உள்ள சட்ட விரோத மதுபானங்கள், மதுபான உற்பத்திகளை முழுமையாக தடை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இதன்போது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அதிகரித்த வெப்பநிலை; நாட்டில் ‘எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் கடும் வெப்பமான வானிலை குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை (28) மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டியானது (Heat Index) சில இடங்களில் ‘எச்சரிக்கை மட்டத்திற்கு’ (Caution Level) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தசைப்பிடிப்புக்கு (Heat cramps) வழிவகுக்கும் என்றும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் போதியளவு நீரை அருந்துமாறும், கடினமான வெளிப்புற வேலைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

மோடி – அநுரவுக்கு இடையிலான பேச்சு எரிபொருளுடன் நாளை வரும் கப்பல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28) நாட்டிற்கு எரிபொருள் கப்பல் ஒன்று கிடைக்கவுள்ளது. 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய இந்தக் கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மற்றுமொரு கட்டமாக இந்த எரிபொருள் கையிருப்பு அமைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு உறுதுணையாக அமைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மத்திய கிழக்கு போர்: வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை விசேட கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (26) வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது. வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். யுத்த சூழலால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வாழும் இலங்கைத் தொழிலாளர்களுடன் மிகவும் முறையான மற்றும் தொடர்ச்சியான தொடர்பாடலைப் பேணுவதன் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது. வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான கொள்கை முடிவுகளைச் சரியாக நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. வெளிநாடு செல்லும் பெண்களுக்கான குடும்பப் பின்னணி அறிக்கைகளை (Family Background…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கட்டைக்காடு பகுதி களில் யானைகளை  விரட்டியடிப் பதற் குரிய  நடவடிக்கை

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதிகளில் அண்மையில் யானை தாக்குதலால் சேதமடைந்த பகுதிகளை பாராளுமன்ற உறுப்பினரும்,  வடமராட்சிக்  கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி இன்றைய தினம் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களோடு உரையாடிய ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனத்திணைக்களம்  போன்றவர்களோடு பேசி யானைகளை  விரட்டியடிப்பதற்குரிய  நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் யானைகள் திசை மாறி வடமராட்சி கிழக்கு பகுதிக்கு வந்துள்ளதகவும் அவர் தெரிவித்தார். இதில் வடமராட்சி தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சாம்,  பருத்தித்துறை பிரதேச சபையின்  உறுப்பினர்களான பரிதா ஜெகதீஸ், கோ.கலைச்செல்வன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை நிச்சியவெட்டை கேவில் வீதி திருத்த வேலைகளையும் பார்வையிட்ட ரஜீவன்  ஜெயசந்திரமூர்த்தி  கிரவல் பிரச்சனை காரணமாக கால தாமதமாகியிருந்த குறித்த வீதி திருத்த பணிக்கு சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி உடனடியாக கிரவல் பெற்றுக்கொள்ள…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

வகையில், 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விசேட விலை குறைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக பொதுமக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.பண்டிகை காலங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் என பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன குறிப்பிட்டார். அத்துடன் பண்டிகை காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.இதேவேளை விலைக் குறைப்புகளுடன் இணைந்து, உள்ளூர் சந்தையில் அதிக விலைக்குப் பொருட்களை விற்கும் வியாபாரிகளைக் கண்டறியும் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மயக்க மருந்து கொடுத்து பெண் களை கடத்தி கொள்ளை மற்றுமொரு சந்தேக நபரும் அதிரடியாக கைது

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி கொலை செய்து வந்த கும்பலுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரும் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை நேற்று வியாழக்கிழமை (26) இரவு மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரே யருடன் கைது செய்ததுடன் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தி வந்த சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மற்றும் ஸ்பிரே, மாத்திரைகள்  என்பவற்றை  மீட்டுள்ளதாக கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்துள்ளார். கடந்த 20ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல்போனதா மற்றொரு  பெண் ஒருவர் சடலமாக கிணற்றில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. புலச் செய்திகள் 

இத்தாலியில் பணி யாற்றிய இலங்கை வம்சாவளி பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு

இத்தாலிய பொலிஸ் துறையில் பணியாற்றிய ஒரே இலங்கை வம்சாவளி அதிகாரியான  27 வயதுடைய  ஷெஹான் பெர்னாண்டோ , மிலனில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வென்னப்புவ, தல்டேனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷெஹான், மிலனில் உள்ள தனது தங்குமிடத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக இத்தாலிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது உடலுக்கு அருகிலேயே அவரது பணித் துப்பாக்கியும் (Service Weapon) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் ஒரு தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது குறித்து இத்தாலிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
உலக செய்திகள் சிறப்புச் செய்தி 

வளைகுடா கடற் பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி (BBC) செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) நாடுகளின் துறைமுகங்களை நோக்கிச் சென்ற கப்பல்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பின்வரும் பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளன: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகப் பல சர்வதேச கப்பல் நிறுவனங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. வெளிநாடுகளில் பணியாற்றும் மாலுமிகள் அனுப்பும் பணத்தை  நம்பியிருந்த ஆயிரக்கணக்கான…

மேலும் படிக்க