தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தம்பலகாமத்தில் தொடர் கொள்ளை: நால்வர் கைது

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில், இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்ற தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் மூன்று வீடுகளை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இன்றையதினம் அதிகாலை சுமார் 2.30 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் ஜன்னல் கம்பிகளை அகற்றி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். முதல் வீட்டில்: சுமார் 10 பவுன் தங்க நகைகள். இரண்டாம் வீட்டில்: 70,000 ரூபாய் ரொக்கம். மூன்றாம் வீட்டில்: 5 குவைத் தினார் மற்றும் 30 இந்திய ரூபாய் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தம்பலகாமம் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளின் போது…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

மாணவர்கள் குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணை! அதனை கண்டித்து மாணவர் கள் போராட்டம்

விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக உரிமை கோரி விரிவுரைகளை புறக்கணித்து இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டமானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக ஆரம்பமாகியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மூன்று மாணவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.அதனை கண்டித்து மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அநுரவின் ஆட்சியிலும் இடம்பெறும் அடக்குமுறைகளை நிறுத்துமாறும், இனிமேல் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் வழங்க கூடாது என்றும், விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தோடு நிறைவு செய்யுமாறும் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசாரணைகளுக்காக மாணவர்கள் சென்றுள்ள நிலையில் அவர்கள் திரும்பி வரும்வரை தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபடுகின்ற மாணவர்கள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அர்ச்சுனாவிற்கு எதிராக கொடும்பாவி எரித்து போராட்டம்

கமக்கார அமைப்புக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக கொடும்பாவி எரித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25-02-2025 அன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் மீதும் ஏனைய கமக்காரர் அமைப்புக்கள் மீதும் ஊழல் இடம்பெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். குறித்த குற்றச்சாட்டை விசாரிக்க கோரி ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரிடம் மகஜர் கையளிக்கும் நோக்குடனும் விவசாயிகள் மீதான பொய்யான குற்றச்சாட்டை நிரூபிக்க வலியுறுத்தி இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன 28 அமைப்புக்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். காக்கா கடைச்சந்தியிலிருந்து ஆரம்பித்த போராட்டமானது பேரணியாக மாவட்ட செயலகம் வரை வந்து மாவட்ட அரசாங்கதிபரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்திருந்தனர். அதன்பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

அன்னை பூபதி அவர்களின் அறப்போராட்டம் தொடங்கிய நாள்.

ஈழப் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி அவர்களின் அறப்போராட்டம் மிகவும் முக்கியமானது. 1988-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் தொடங்கினார். :இந்திய அமைதிப்படைக்கும் (IPKF) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடந்துகொண்டிருந்த சூழலில், பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்தப் போராட்டத்தை நடத்தினார்: உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும். விடுதலைப் புலிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தியாகப் பயணம் ஆரம்பம்: 1988 மார்ச் 19. காலம்: நீர் மட்டும் அருந்தி 32 நாட்கள் தொடர்ச்சியாகப் போராடினார். வீரச்சாவு: 1988 ஏப்ரல் 19 அன்று தனது போராட்ட இலட்சியத்திற்காக உயிர்நீத்தார்.மக்களுக்காகத் தாய் ஒருத்தி உயிர் கொடுத்தார்” என்ற பெருமைக்குரியவராக, ஈழத் தமிழ் மக்களின் இதயங்களில் ஒரு மாபெரும் அறப்போராளியாக அவர் இன்றும் நினைவு கூரப்படுகிறார்.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

உலகளாவிய பதற்றம்: ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்க மோதல் ஒரு அபாயகரமான புதிய கட்டத்தில்

உலகளாவிய பதற்றம்: ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்க மோதல் ஒரு அபாயகரமான புதிய கட்டத்தில் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுத்து: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | சர்வதேச அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ✧✧ எல்லைகளைக் கடந்த போர்: நிழல் யுத்தத்திலிருந்து நேரடி மோதல் வரை ✧✧ மத்திய கிழக்கு பிரதேசம் தற்போது நவீன புவிசார் அரசியல் வரலாற்றில் மிக ஆபத்தான கட்டத்தைச் சந்தித்து வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையில் ஒரு காலத்தில் இரகசியமாக நடைபெற்ற “நிழல் யுத்தம்” (Shadow War) இப்போது வெளிப்படையான, தொடர்ச்சியான இராணுவ மோதலாக மாறியுள்ளது. இந்த மோதல் அமெரிக்காவையும் நேரடியாகக் களமிறக்கி, உலகளாவிய போருக்கான அச்சத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அலி லாரிஜானி உள்ளிட்ட ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள், தெஹ்ரானிடமிருந்து இராணுவ ரீதியாகவும் அரசியல்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் வரும் ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்!

ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐ.நா பிரதிநிதிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தருவதாகவும், யாழ்ப்பாணம் வருகை தரும் குழுவினர் யாழில் பல தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஏப்பிரல் மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். யாழ்ப்பாணம் வருகை தரும் ஐரோப்பிய யூனியன் குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரூமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தெற்கு மற்றும் மத்திய ஆசியா விற்கான அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) இலங்கைக்கு வருகை

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இம் மாதம் 19 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக  அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.இந்த விஜயத்தின் போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் உயர் மட்ட சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், சிறப்பு தூதர் செர்ஜியோ கோர், அரசின் சிரேஷ்ட தலைவர்களுடன் சந்தித்து அமெரிக்கா–இலங்கை உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தவுள்ளார். மேலும், முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. இந்த சந்திப்புகள், முக்கிய கடல் போக்குவரத்து வழிகளைப் பாதுகாப்பது, துறைமுகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவது போன்ற அமெரிக்காவின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மத்திய கிழக்கு விமான சேவைகள் இரத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதற்கமைய, துபாய்க்கான விமான சேவைகள் இன்றும், நாளையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.அத்துடன், தமாம், தோஹா குவைத் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.பயண முன்பதிவுகளை செய்தவர்கள் தங்களின் போக்குவரத்து தொடர்பில் 1979 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகங்களுக்குச் சென்று, விமான சேவைகள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கொக்கட்டிச் சோலையில்.கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை காவல் துறை பிரிவுக்குட்பட்ட மண்முனைப்பாலம் பகுதியில் இன்று பிற்பகல் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று  .காவல் துறையினரால்.முற்றுகையிடப்பட்டுள்ளது. முழுநாடும் ஒன்றாக ஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக கொக்கட்டிச்சோலை  காவல் துறையினரால்.தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன்கீழ் நேற்றைய தினம்.பிற்பகல் மண்முனைப்பாலத்திற்கு அருகில் உள்ள கன்னக்காடு பகுதியில் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையம்  காவல் துறையினரால்.முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது நான்கு பறல்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த கசிப்பு காய்ச்சுவதற்கான சுமார் 720,000 மில்லி லீற்றர் கோடா மீட்கப்பட்டு காவல் துறையினரால்.அழிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் கொக்கட்டிச்சோலை காவல் துறை தெரிவித்தனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வடக்கில் பாட சாலைகளுக்குள் மத நூல்களை விநி யோகிக்கத் தடை – ‘ஆளுநரால் புதிய நடைமுறை

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாள்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாகப் புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, குறித்த விநியோகமானது றோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின்…

மேலும் படிக்க