பொதுவான செய்திகள் 

பாராளுமன்ற உறுப்பினர் சென்ற கார் மதிலில் மோதி விபத்து

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த கார், சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.அந்த நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே காரில் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்தினால் கார் மற்றும் மதிலுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வயோதிபப் பெண் ஒருவர் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகதேவன் சிவஞானம் என்ற 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குறித்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் ஊர் மக்களும் தொடர் தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலை மந்துவில் வன்னியாசி மதகு பகுதியிலுள்ள சிறிய காட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறிருக்க இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என ஊர் மக்கள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

இலங்கையில் வெப்ப நிலை 40 பாகை செல் சியஸ் இனை விட அதிகமாக இருக்கும்!

இலங்கையில் 02.04.2026 முதல் 15.04.2026 வரை வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்  என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை அவர் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் 02.04.2026 முதல்  15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் என்பதனால் இலங்கை முழுவதும் அதிக வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் 04.04.2026 அன்று சூரியன் பருத்தித்துறைக்கு நேராகவும், 05.04.2026 அன்று சூரியன் எல்பிட்டியவுக்கு நேராகவும், 06.04.2026 அன்று களுத்துறைக்கு நேராகவும், 07.04.2026 அன்று கொழும்புக்கும் களனியாவுக்கும் நேராகவும், 08.04.2026 அன்று மகியங்கனைக்கு நேராகவும் உச்சம் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

செங்கடல்: ஈரான்–அமெரிக்க பதற்றம் அதிகரிப்பால் உலக ளாவிய கப்பல் போக்கு வரத்து ஆபத்தில்

விளிம்பில் செங்கடல்: ஈரான்–அமெரிக்க பதற்றம் அதிகரிப்பால் உலகளாவிய கப்பல் போக்குவரத்து ஆபத்தில் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ வர்த்தகம், எரிசக்தி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள பலமுனை நெருக்கடி மத்திய கிழக்கில் ஒன்றோடொன்று இணைந்த மோதல்கள் தீவிரமடைந்து வருவதால், சர்வதேச அமைப்பு மிகவும் ஆபத்தான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. ஆரம்பத்தில் தனித்தனி பிராந்திய மோதல்களாக இருந்தவை, இப்போது செங்கடல் முதல் பாரசீக வளைகுடா வரை பரவியுள்ள ஒரு பரந்த நெருக்கடியாக மாறியுள்ளது. இது உலகளாவிய வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. செங்கடலில் பதற்றம்: கப்பல் போக்குவரத்து பாதைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் யேமனில் செயல்படும் ஹூதி படைகளின் புதிய ஏவுகணைத் தாக்குதல்களைத்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பஸ்களில் புதிய கட்டணப் பட்டியல் கட்டாயம். போக்கு வரத்து அதிகாரசபை!

கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த 12.19% பஸ் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து, புதிய கட்டண விபரங்களை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துமாறு போக்குவரத்து அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. முக்கிய விதிமுறைகள் மற்றும் தண்டனைகள்: பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி, ஒவ்வொரு பேருந்திலும் திருத்தப்பட்ட கட்டணப் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும். பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறும் பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் (Permit) தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இரத்து செய்யப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட மேலதிகமாக அறவிட முடியாது. அவ்வாறு அறவிடுவது சட்டவிரோதமானது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளது. புதிய கட்டண விபரங்கள் : குறைந்தபட்ச கட்டணம்: ரூ. 27 இல் இருந்து ரூ. 30 ஆக அதிகரிப்பு. அதிகபட்ச கட்டணம்: ரூ.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மறைந்த ஊடகச் செம்மல் சலீமிற்கு முதற்தடவையாக காரைதீவு மண்ணில் நினைவஞ்சலி….

மறைந்த ஊடகச் செம்மல் சலீமிற்கு முதற்தடவையாக காரைதீவு மண்ணில் நினைவஞ்சலி…. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கங்கத்தின் பிரதி தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம் சலீமிற்கு நேற்று சனிக்கிழமை (28) காரைதீவில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மூன்று தசாப்த காலமாக சிரேஷ்ட ஆலோசகராகவும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்து இன,மத வேறுபாடின்றி வாழ்நாள் முழுவதும் ஊடகத்திற்காக குரல் கொடுத்து மறைந்த ஏ.எல்.எம் சலீமின் தியாகங்களை நினைவு கூர்ந்து இந் நிகழ்வு இடம்பெற்றது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் ச.லோகநாதன் தலைமையில் அவரது இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்பமாக அன்னாருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொழிற்சங்க வளர்ச்சிக்காக அமரர் ஏ.எல்.எம் சலீம் யுத்த…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

வகுப்பறைக்குள் வைத்து மாணவர் ஒருவரைத் தாக்கிய  மூவர் கைது

ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் வகுப்பறைக்குள் வைத்து மாணவர் ஒருவரைத் தாக்கிய  மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் உட்பட மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர், குறித்த பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாடசாலை மட்டத்தில் இந்தச் சம்பவம் ஆரம்பத்தில் சமரசம் செய்யப்பட்ட போதிலும், தாக்குதல் நடத்தப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் நேற்று பிற்பகல் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான நாளை (30) அறிவிப்பு.

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதித் தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  நாளை (30) அறிவிக்கவுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கு அனைத்து நுகர்வோர் பிரிவுகளுக்கும் 13.56 சதவீத கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவும் கடும் வறட்சி, தரமற்ற நிலக்கரி விநியோகம் மற்றும் மின் உற்பத்திக்காக அதிகளவில் டீசலைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளமை போன்ற காரணங்களால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போது எதிர்பார்க்கப்படும் வருமானத்தை விட, செயல்பாட்டுச் செலவுகளுக்கு மேலதிகமாக 15.8 பில்லியன் ரூபா தேவைப்படுவதால் இந்த விலை உயர்வு கோரப்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரலால், “மின்சார சபை சமர்ப்பித்துள்ள தரவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கட்டணத்தை அதிகரிப்பதா அல்லது தற்போதைய…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

முல்லை கோம்பாவில் ஜனசக்தி முன்பள்ளியின் விளையாட்டு விழா

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கோம்பாவில் ஜனசக்தி முன்பள்ளிச் சிறார்களின் வருடாந்த விளையாட்டுவிழா 27.03.2026நேற்று சிறப்புற இடம்பெற்றது. குறித்த விளையாட்டுவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் இந்நிகழ்வானது விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பமானது. குறிப்பாக விருந்தினர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், முன்பள்ளிச் சிறார்களின் மேலைத்தேய இசைக்கருவிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சிறார்களின் விளையாட்டுக்கள் ஆரம்பமாகின. அத்தோடு சிறார்களின் இசையும் அசைவும் மற்றும் விநோத உடை ஆகிய நிகழ்வுகள் பார்வையாளர்யாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்திருந்தன. அதேவேளை விளையாட்டுக்களில் வெற்றியீட்டிய சிறார்கள் இதன்போது பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டதுடன், விளையாட்டுக்களில் பங்கேற்ற சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் தலைவரும் ஓய்வு நிலை பிரதிகல்விப்பணிப்பாளருமான பொன்.பேரின்பநாயகம்,…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

வடக்கு முன்னணி தீப்பற்றுகிறது: ஹிஸ்புல்லா–இஸ்ரேல் மோதல் பிராந்தியப் போரை நோக்கி நகர்கிறது

வடக்கு முன்னணி தீப்பற்றுகிறது: ஹிஸ்புல்லா–இஸ்ரேல் மோதல் பிராந்தியப் போரை நோக்கி நகர்கிறது துல்லியத் தாக்குதல்கள் • டாங்கி இழப்புகள் • விரிவடையும் போர்க்களம் — அபாயகரமான திருப்புமுனை ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுத்து: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | சர்வதேச அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ மோதலின் வெடிப்பு: ஒருங்கிணைந்த தாக்குதல்களின் சாதனை அலை இஸ்ரேல்-லெபனான் எல்லை மோதல், கடந்த பல தசாப்தங்களில் இல்லாத மிக மோசமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. மிகக் குறுகிய காலத்திற்குள் 96 ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. இது தாக்குதலின் வேகம் மற்றும் தீவிரத்தில் முன்னெப்போதும் இல்லாத ஒரு வளர்ச்சி என விவரிக்கப்படுகிறது. ​இந்தத் தகவல்களின்படி, இந்த நடவடிக்கைகள் இஸ்ரேலிய எல்லைக்குள் 120 கிலோமீட்டர் தூரம் வரை விரிவடைந்துள்ளன. இராணுவ முகாம்கள்,…

மேலும் படிக்க