இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

முச்சக்கர வண்டி நீர்வீழ்ச்சியில் கவிழ்வு; 2 பேர் பலி

நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (22) காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், 3 பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டியின் சாரதியும், அதிலிருந்த மற்றொரு நபருமே இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற சமயத்தில் குறித்த முச்சக்கர வண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். முச்சக்கர வண்டி அதிக வேகத்துடன் சென்றுகொண்டிருந்த வேளையில், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மூவரும் தற்போது வைத்தியசாலையில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள்

இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) நகரங்களுக்கிடையிலான மற்றும் நீண்ட தூரப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வலுப்படுத்துவதற்காக, 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது 2026-ஆம் ஆண்டுக்கான அரச முதலீட்டுத் திட்டத்தின் கீழ், 49 முதல் 54 பயணிகள் அமரும் வசதி கொண்ட 600 புதிய சாதாரண வகைப் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆரம்பத்தில் 14.4 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், 2025–2026-ஆம் ஆண்டிற்கான வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளுக்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்திற்கு உயர்தர வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட பேருந்துகளே (deluxe air-conditioned buses) மிகவும் பொருத்தமானவை என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த சாதாரண வகைப்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வினாத்தாள் அச்சிடுவதில் தாமதம்; 9 ஆம் தரப் பரீட்சை ஒத்திவைப்பு

இரண்டாம் தவணைப் பரீட்சைகளின் ஒரு பகுதியாக இன்று (22) நடைபெறவிருந்த 9 ஆம் தரத்துக்கான புவியியல் மற்றும் குடியியல் கல்விப் பாடங்களுக்கான பரீட்சையை தென் மாகாணக் கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட இந்தப் பரீட்சை எதிர்வரும் ஜூலை 24-ஆம் திகதி நடைபெறும் என தென் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். பரீட்சை வினாத்தாள் அச்சிடும் பணியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, உரிய கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு வினாத்தாள்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மாற்றம் குறித்து சம்பந்தப்பட்ட கல்வி வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தேவேந்திரமுனையில் மீனவர் வீடு மீது துப்பாக்கிச் சூடு;

மாத்தறை – தேவேந்திரமுனை, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீடு மீது இன்று (22) அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, கார் ஒன்றில் வந்த சிலர் கைத்துப்பாக்கி மூலம் வீட்டை இலக்காகக் கொண்டு  துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்றும், வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீதி புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்.

வீதி புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் ஆளுகைக்குட்பட்ட கிருஷ்ணபுரம்–விநாயகபுரம் வீதி மற்றும் கோவில்காடு பிரதான வீதி ஆகியவற்றைப் புனரமைப்பதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் இன்று (21.07.2026) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தெரிவுசெய்யப்பட்ட வீதிகளை புனரமைப்புப் பணிகளுக்காக உரிய திணைக்களங்களிடம் கையளித்தல், அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் பணிகளை துரிதமாக ஆரம்பிப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர், கணக்காளர், கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச சபை உபதவிசாளர், கரைச்சி பிரதேச சபைச் செயலாளர்,…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

யாழில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் தமிழ் அரசியல் கட்சிகள் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடும் நோக்கில் யாழ்ப்பாணம் வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர், நேற்று  தனியார்  விடுதியில் தமிழ் அரசியல் தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மதிவதனி, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அக்கட்சியின் கலாநிதி க. சர்வேஸ்வரனும் கலந்துகொண்டு, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விடயங்கள் மற்றும் தமிழர் சமூகத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஆழிப்பேரலை நினைவுக் கிண்ணத்தை தனதாக்கியது வட்டுவாகல் உதயசூரியன்

ஆழிப்பேரலை நினைவுக்கிண்ணத்தை தனதாக்கியது வட்டுவாகல் உதயசூரியன் முல்லைத்தீவு – கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழகத்தினால் அமரர் நாகேஸ்வரன் றமணா ஞாபகார்த்தமாக ஆழிப்பேரலை நினைவுக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடர் ஒன்று நடாத்தப்பட்டது. குறித்த கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழக அணியும், அளம்பில் இளந்தென்றல் விளையாட்டுக்கழக அணியும் மோதின. இந்நிலையில் இறுதிப்போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழக அணியினர் வெற்றியீட்டி கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டனர். இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செ.திலகநாதன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, முல்லை மறைக்கோட்டத்தின் பங்குத்தந்தை எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முள்ளிவாய்க்கால் பிலவுவெளி கமவீதியின் சீரமைப்பு பூர்த்தி;

ரவிகரன் எம்.பியின் கடும் பிரயர்த்தனத்தினால் முள்ளிவாய்க்கால் பிலவுவெளி கமவீதியின் சீரமைப்பு பூர்த்தி; மக்கள் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டது. வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடைய கடுமையான தொடர்முயற்சியின் பலனாக, முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட பிலவெளி, கமவெளி, புறக்கட்டு வெளி, கோயில்தறைவெளி உள்ளடங்கலான வயல்நிலங்களுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தும் பிலவுவெளி கமவீதியின் சீரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளது. இந்நிலையில் சீரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்த குறித்த பிலவுவெளி கமவீதியானது 20.07.2026இன்று மக்கள் பாவனைக்காக இன்று திறந்துவைக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு- முள்ளியவளை கமநலசேவைநிலயப் பிரிவிலுள்ள, முள்ளிவாய்க்கால் கிழக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட பிலவெளி, கமவெளி, புறக்கட்டு வெளி, கோயில்தறைவெளி உள்ளடங்கலான வயல்நிலங்களுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தும் பிலவுவெளி கமவீதி மற்றும் அரசடி கமவீதி என்பன சீரின்றிக்காணப்பட்டது. இத்தகையசூழலில் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் விவசாயிகள் விதைநெல், உரம் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பயங்கர வாதத் தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும்! ஹர்ஷன நாணயக்கார

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) விரைவில் நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், பல தசாப்த கால பழமையான சட்டத்தை ஒழிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கையாக புதிய சட்டமூலம் ஏற்கனவே அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும் என அமைச்சர் உறுதிப்படுத்தினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்றத்தின் ஊடாகப் பிணை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் விளக்கமளித்தார். பிணை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கை முடிவு அல்ல என்றும், இதுபோன்ற விவகாரங்களில் நீதித்துறை சுதந்திரமாகச் செயற்படுகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐக் கடந்துள்ளது.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க இந்த ஆண்டின் நேற்று வரையான காலப்பகுதியில் 76,044 டெங்கு நோயாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதுடன் 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த  ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த  பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ள  னர்.கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம்   15,910 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.  ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5330 பேரும், கண்டியில் 5111 பேரும், களுத்துறையில் 5010 பேரும் இரத்தினபுரியில் 4295 பேரும், காலியில் 4260 பேரும் பதிவாகியுள்ளதாக அந்தப்…

மேலும் படிக்க