நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐக் கடந்துள்ளது.
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க இந்த ஆண்டின் நேற்று வரையான காலப்பகுதியில் 76,044 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ள னர்.கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 15,910 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5330 பேரும், கண்டியில் 5111 பேரும், களுத்துறையில் 5010 பேரும் இரத்தினபுரியில் 4295 பேரும், காலியில் 4260 பேரும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

