தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீதி புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்.

வீதி புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் ஆளுகைக்குட்பட்ட கிருஷ்ணபுரம்–விநாயகபுரம் வீதி மற்றும் கோவில்காடு பிரதான வீதி ஆகியவற்றைப் புனரமைப்பதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் இன்று (21.07.2026) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தெரிவுசெய்யப்பட்ட வீதிகளை புனரமைப்புப் பணிகளுக்காக உரிய திணைக்களங்களிடம் கையளித்தல், அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் பணிகளை துரிதமாக ஆரம்பிப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர், கணக்காளர், கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச சபை உபதவிசாளர், கரைச்சி பிரதேச சபைச் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர், சம்பந்தப்பட்ட வீதிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஊடகப்பிரிவு
மாவட்டச்செயலகம்

அன்மைச் செய்தி

Leave a Comment