சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்.

பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (வயது 88) இன்று காலமானார். தனது மந்திர குரலால் கோடிக்கணக்கான மனங்களை வசப்படுத்தியிருந்த அவர், இன்று காலமானார். ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 48,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். 1938ம் ஆண்டு ஆந்திராவின் பல்லேபட்லா கிராமத்தில் ஏப்ரல் 23 அன்று பிறந்தார். 19 வயதிலேயே இவர் சினிமா துறைக்குள் நுழைந்துவிட்டார். 1957ல் வெளியான ‘விதியின் விளையாட்டு’ என்கிற தமிழ் திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் இளையராஜா, எம்எஸ் விஸ்வநாதன் என முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து மறக்க முடியாத பாடல்களை கொடுத்திருக்கிறார். இவர் 4 முறை சிறந்த பின்னணி பாடகி என்று தேசிய விருதுகளை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தமிழ் மக்களி டமிருந்து ராஜபக்சக் கள் கொள்ளையடித்த நகைகளை மக்களு க்கு வழங்க வேண்டும்

தமிழ் மக்களிடமிருந்து ராஜபக்சக்களால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீண்டும் அவர்களிடம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,தமிழரசுக்கட்சி எம். பி எஸ். சிறீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவற்றில் ஊழல் நடந்துள்ளதால் இது தொடர்பில் விசாரணை செய்யாமல் விட முடியாது என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நகைகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக பட்டியலைக் கோரி அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்ட அவர்,எத்தனை ஆயிரம் பேர் நகைகளை அடகு வைத்துள்ளனர். அவ்வாறென்றால் எவ்வளவு கோடி ரூபா பெறுமதியான நகைகளை ராஜபக்‌ஷ அரசாங்கம் கொள்ளையடித்துள்ளது என்பதனை வெளிக்கொண்டு வாருங்கள் என்றும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கரும்புலிகள் நாள் ஜூலை 5-

கரும்புலிகள் நாள் ஜூலை 5- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5-ஆம் நாள் ஈழத் தமிழர்களால் கரும்புலிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொடைப் பிரிவான கரும்புலிகளின் முதல் தற்கொலைத் தாக்குதலை 1987-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம்  திகதி. கப்டன் மில்லர் (வல்லிபுரம் வசந்தன்)  நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவ முகாம் மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை மோதி முதன் முதலாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் நடந்த ஜூலை 5-ஆம் நாளை, விடுதலைப் புலிகள் இயக்கம் “கரும்புலிகள் நாள்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, ஆண்டு தோறும் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்களால் இந்நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் ஒன்பது நாளை எட்டியது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள குறித்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியே தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 59.5 ஏக்கர் காணிகள் பூர்வீக மக்களுக்குச் சொந்தமானவை என்றும், தற்போது அந்தப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ நிலைகளை அருகிலுள்ள மாற்று நிலங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறே தாங்கள் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தனர். தேசிய பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இராணுவ முகாம்களை மாற்றி அமைத்து, பூர்வீக மக்களின் காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைக்க…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ்ப்பாணம் செம்மணியில் 427 தீப்பந்தங்கள் ஏற்றி மக்கள் எழுச்சிப் போராட்டம்!

யாழ்ப்பாணம் செம்மணியில் 427 தீப்பந்தங்கள் ஏற்றி மக்கள் எழுச்சிப் போராட்டம்! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள அணையா விளக்கு திடல் பகுதியில், மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் “உரிமைப்பந்தம்” என்ற அமைதி வழி மக்கள் எழுச்சி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கடந்த காலங்களில் செம்மணி பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவாக இந்த விழிப்புணர்வுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில், செம்மணி அணையா விளக்கு தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உலகளவில் பேசப்பட்ட ஒன்றான நிலையில், அங்கு தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுடன், கடந்த 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகளின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி 

வவுனியாவில் ஆளுநருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்!

வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநருக்கு ஏதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்னால் இன்று குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அங்கிருந்து மன்னார் வீதி வழியாக ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நின்று கோசங்களையும் எழுப்பியிருந்தனர். வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிட்டப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் ”ஆளுநரே ஜனநாயக படுகொலையை நிறுத்து, ஜேவிபியின் முகவராக ஆளுநரே செயற்படாதே, பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காட்சிக்கு மாநகர சபையிடம் காணி உரிமம் உண்டா?, மக்கள் ஆணைக்கு மதிப்பளி, தையிட்டியில் பாராமுகம் மாநகர சபையில் பழிவாங்களா, ஊழல் அறிக்கையை…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி 

பலாலியில் இராணு வம் கையகப் படுத்திய காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் – பலாலியில் இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி, பிரதேச மக்கள் இன்று (28) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பலாலி உதயகலைவாணி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டம், காலை 8.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. தங்களது பூர்வீக நிலங்களை இழந்து 36 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், விரைவில் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்”, “எங்கள் நிலங்களை விடமாட்டோம்”, “நிலமே எங்கள் மூச்சு; அது இல்லையேல் வாழ்வு போச்சு”, “அரசே, இராணுவத்தை வெளியேற்று; மக்கள் குடியேற வழிவகை செய்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முல்லைத்தீவு, கேப்பாபிலவு மக்கள் மீண்டும் ஒரு தார்மீக நிலமீட்புப் போராட்டம்

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் மீண்டும் ஒரு தார்மீக நிலமீட்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ​மக்கள் ஏந்தியுள்ள பதாகைகளில் உள்ள முக்கிய கோரிக்கைகள்: ​”வாக்குறுதி என்னாச்சு? காணி விடுவிப்பு எப்போது? “ – தங்களுக்கு வழங்கப்பட்ட காணி விடுவிப்பு தொடர்பான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமை? ​”நீதி எங்கே? நீதி எங்கே? தமிழ் மக்களின் நில உரிமை எங்கே?” – பூர்வீக நிலங்களை இழந்து தவிக்கும் தமிழ் மக்களின் அடிப்படை நில உரிமை மற்றும் நீதிக்கான கோரிக்கை. ​”நாடா? … இராணுவ ஆட்சியா?” – தங்களின் வாழ்விடங்கள் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிரான கண்டனம். ​பல வருடங்களாகத்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச பன்னாட்டு விசார ணைக்கு உட்படுத்தப் படவேண்டும். ரவிகரன்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு உரிய வடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் 23.05.2026இன்று உரையாற்றும் போதே தனநாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழியானது தற்போது நாட்டிலே பாரிய மனிதப்புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரையில் 412 எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 390எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக சிறார்கள், பெண்கள், ஆண்கள், முதியோரென பலதரப்பட்டவர்களுடைய எலும்புக்கூடுகளும் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் கடந்தவாரம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணி மனிதப்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணியில் மேலும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் மூன்று என்புத் தொகுதிகள் ஒரே நேர்க்கோட்டில் புதைக்கப்பட்டவாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாய்வுப் பணிகளின் 31ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன. நேற்றைய தின அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 மனித என்புத் தொகுதிகளும் முறைப்படி சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. இதில் 3 மனித என்புத் தொகுதிகள் ஒரே நேரில் (ஒரே நேர்கோட்டில்) புதைக்கப்பட்டவாறு காணப்படுகின்றன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் இடப்பட்டிருந்த என்புத் தொகுதிகளில் மேலும் 13 மனித என்புத் தொகுதிகள் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு…

மேலும் படிக்க