அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு!
தமிழ்த் தரப்பு சார்பில் பொதுவாக எவ்வாறானதொரு அரசியல் அமைப்பை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பாக, பரந்துபட்ட மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய ஒரு வரைவைத் தயாரிப்பதற்காக 33 நபர்களைக் கொண்ட ‘ஈழத் தமிழர் அரசியல் நிர்ணய சபையின் வழிநடத்தல் குழு’ தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஈழத் தமிழர் அரசியல் நிர்ணய சபையின் பொதுச் சபையின் இரண்டாவது கூட்டமானது யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் எனப் பல்வேறு தரப்புகளின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்துகொண்டனர். முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள்…
மேலும் படிக்க