தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் யாழில் பலி!

போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியிருந்த குடும்பஸ்தர் ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார். கடந்த மே மாதம் 28ஆம் திகதி கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக, மேலதிக அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் விசேட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.பிரேத பரிசோதனைகளின் பின்னர் அன்னாரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வேலணையை அச்சுறுத்திவந்த பிரதான மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு கைது

யாழ்ப்பாணம் – வேலணையை அச்சுறுத்திவந்த பிரதான மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஊர்காவற்றுறை பொலிசார் திருட்டில் ஈடுபடுவோர் மிகக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வேலணை பிரதேசத்தை நீண்ட நாள்களாக அச்சுறுத்தி வந்த மாடு கடத்தல் மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை  குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர் வேலணை, புங்குடுதீவு, அல்லைப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில், நீண்டகாலமாக பண்ணையாளர்களின் பெறுமதிமிக்க கறவை மாடுகள் மற்றும் வீடுகளை உடைத்து நகைகள் உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பொருட்களை திருடிவந்த குழுவே கடந்த இரு நாள்களில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் நீண்ட நாள்களாக தேடப்பட்டுவந்த நிலையில், பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை, பருத்தியடைப்பு ஆகிய பகுதிகளில்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் போது, 355 என்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் இன்றையதினம் மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 24ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றையதினம் நடைபெற்றது. அதன் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் குழந்தை ஒன்று , நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , புதிதாக மேலும் இரண்டு என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 355 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 341 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை அகழ்வு பணிகளில் ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றையதினம் முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர். யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ், பேராசிரியர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

1001 நாட்கள் போராடி வரும் தம்மை ஏமாற்றி அரசாங்கமும் அதிகாரிகளும்!

தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடி வரும் தங்களுக்கு, அரசாங்கமும் அதிகாரிகளும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஏமாற்றி வருவதாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 1001நாட்களை கடந்து இன்றைய தினமும் போராட்டம் சித்தாண்டி சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது கால்நடைப்பண்ணைக்குரிய காணியை தங்களுக்கு வழங்குமாறு கோரி 1001 நாட்கள் போராடிவரும் தம்மை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், மேய்ச்சல் தரைக்காக 1570 ஏக்கர் நிலத்தை விடுவிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை. கொழும்பில் உள்ள மகாவலி அதிகார சபை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கடந்த 10 ஆம் திகதி தம்முடன் ஒரு முக்கிய சந்திப்பை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காத்தான்குடி பிரதான வீதியில் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் சிக்கிய நபர் ஒருவர், சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதி வடிகானுக்குள் நேற்று மாலை நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காத்தான்குடி பொலிஸாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இரவு 7.30 மணியளவில் அந்த நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணாமல் போன 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினரால் சிறுவன் காணவில்லை என நேற்று (12) இரவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பருத்தித்துறை பொலிஸார் உடனடியாக விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் ஆரம்பித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சிறுவனின் வீட்டிற்கு அருகில் அமைந்திருந்த கிணறு ஒன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அச்சுவேலி – தீர்த்தங்குளம் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவல்

யாழ்ப்பாணம் அச்சுவேலி – தீர்த்தங்குளம் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவல் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேகமாக பரவிய தீ காரணமாக அப்பகுதியில் சில நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் நடவடிக்கையால், தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவலை அச்சுவேலி காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர்சேதமோ அல்லது பெரியளவிலான பாதிப்புகளோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பில்  அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணை அறிக்கையின் பின்னரே தீ விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ். செயலக முன்றலில் காணி களை விடுவிக்கக் கோரி மாபெரும் மாபெரும் போராட்டம்

காணிகளை விடுவிக்கக் கோரி மாபெரும் போராட்டம் – யாழ். செயலக முன்றலில் திரளுமாறு மயிலிட்டி மீள்குடியேற்றக் குழு அழைப்பு   வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்தக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், உயர் பாதுகாப்பு வலயங்களாக முடக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டம் குறித்து மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் ஊடகங்கள் மூலம் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர்.அந்த அறிவித்தலில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி எமது சொந்த ஊர்களில் இருந்து நாம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டோம். இதன்படி, கடந்த ஜூன் 5 ஆம் திகதியுடன் எமது இடப்பெயர்வு அலைக்கு 36 வருடங்கள் நிறைவடைந்து, தற்போது 37 ஆவது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மண்டைதீவு படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம்:

மண்டைதீவு பகுதியில் கடற்படையினரால் 31 மீனவர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதன் 40 ஆவது ஆண்டு நினைவு தினம், நேற்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை நினைவுத் தூபியருகே நடைபெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். குருநகர் ஆலய பங்குத்தந்தையின் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, நினைவுத் தூபிக்கு மெழுகுவர்த்தி மற்றும் தீபங்கள் ஏற்றப்பட்டு, மலர் தூவி உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கடந்த 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி, குருநகர் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் உட்பட 31 மீனவர்கள் ஒரு படகில் கரைவலை மீன்பிடிப்புக்காக மண்டைதீவுக்குச் சென்றிருந்தனர். இதன்போது அங்கு நிலைநாட்டப்பட்டிருந்த கடற்படையினர், அந்த மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்க ;ரவிகரன் எம்.பி

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்க; அடக்குமுறைக் கருவியான பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப்பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்வதற்கு நடவடிககை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு நாட்டில் அடக்குமுறைக் கருவியாகப் பாவிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கபடவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் 10.06.2026இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தின் உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேஸ்குமார் சங்கீத்சன் என்னும் சொல்லிசைப்பாடகர் அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார். இந்த நாட்டிலே காலத்திற்கு காலம் இவ்வாறான கலைஞர்களும், படைப்பாளர்களும், ஊடகவியலாளர்களும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தியதற்காக…

மேலும் படிக்க