செய்திகள் தாயகச் செய்தி 

முல்லை கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா;

முல்லை கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா; முல்லைத்தீவு சுற்றுலாக் கடற்கரையில் 25.01.2026 நேற்றையதினம். மாபெரும் பட்டத்திருவிழாஇடம்பெற்றது. அந்தவகையில் வட்டுவாகல் புலம்பெயர் உறவுகள் மற்றும் வட்டுவாகல் கிராமமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாபெரும் பட்டத்திருவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் மரபுவழியில் விருந்தினர்களது வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து பட்டத்திருவிழாவிற்கான பட்டங்கள் விருந்தினர்களால் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பட்டத்திருவிழா இனிதே ஆரம்பித்தது. அந்தவகையில் மிகவும் பெருந்திரளான மக்கள் இந்தப் பட்டத்திருவிழாவில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் முல்லைத்தீவு கடற்கரையின் வான்பரப்பானது அழகிய வண்ணப் பட்டங்களால் நிறைந்திருந்தது. அந்தவகையில் இந்த மாபெரும் பட்டத்திருவிழாவில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்,. கரைதுறைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி. இராஜயோகினி ஜெயக்குமார், கரைதுறைப்பற்று உதவிப் பிரதேசசெயலாளர் எனப் பலரும்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் மூவருக்கு ரூ. 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம்

சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூ. 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி வழங்கப்படாத இடத்தில் மண் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடந்த வியாழக்கிழமை(22) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பொலிஸ் குழுவினரும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பி செல்வதற்காக உழவு இயந்திரத்துடன் வீதி வழியாக சென்ற போது குறித்த சோதனை நடவடிக்கையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் 3 உழவு இயந்திரங்கள் உட்பட 3 சந்தேகநபர்களையும் மணலுடன் கைது செய்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வவுனியாவில் காவல்துறையினரை மோதி தள்ளிய வாகனம்

வவுனியா ஈரட்டை, களுகுன்னமடுவ பகுதியில் இன்று 24 இடம்பெற்ற சம்பவம் .கட்டளையை மீறி பயணித்த சிறிய லொறி ஒன்றை காவல்துறை அதிகாரிகள் இருவரும் பின்தொடர்ந்து சென்றபோதே, லொறி சாரதி  காவல்துறை அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாககாவல்துறையினர்  தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கிய போது  காவல்துறை அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஒரு ஓரத்தில் விழுந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் லொறியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட காட்சியும் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது. விபத்தில் காயமடைந்த இரண்டு  காவல்துறையினரை தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேகநபர் தப்பிச் சென்றுகொண்டிருந்த போது, இராணுவத்தினர் அவரைக் கைது செய்து  காவல்துறையினரிடம்.  ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் லொறியும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தைப்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள்.

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே நேற்று (23-01-2026) இக்குண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், 60 மிமீ வெடிக்காத இரண்டு குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இச்சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி காவல்துறையினர், குறித்த இடத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தியதுடன் வெடிக்காத இரு குண்டுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பாலத்திலிருந்து குதித்த தாழங்குடா பகுதியைச் சேர்ந்த யுவதி உயிரிழப்பு

மட்டு கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த தாழங்குடா பகுதியைச் சேர்ந்த யுவதி உ+யிரிழப்பு மட்டக்களப்பு தலைமையக  காவல்துறை.பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் இருந்து இன்றிரவு (23) 7 மணியளவில் குதித்த யுவதி ஒருவரை பிரதேச இளைஞர்கள் மற்றும் . காவல்துறையினர் மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தாழங்குடா சமூர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோ விதுசாயினி எனும் யுவதி என அடையாளங்காணப்பட்டுள்ளது இவர் கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறை. மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்து

கிளிநொச்சி நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்திற்குள்ளான குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் கலந்துரையாடல்;எதிர்ப்பேன் என்கிறார் – ரவிகரன் எம்.பி

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் வெள்ளியன்று பாராளுமன்றில் கலந்துரையாடல்; எதிர்ப்பேன் என்கிறார் – ரவிகரன் எம்.பி தமிழர்கள்மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் வடிவமான கிவுல்ஓயா திட்டத்தினைச் செயற்படுத்துவதுதொடர்பிலான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளநிலையில், குறித்த கலந்துரையாடலில் தம்மால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் 21.01.2026இன்று இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கிவுல்ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 23ஆம்திகதி கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் அக்கலந்துரையாடலில் குறித்தவிடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்குமாறு அமைச்சர் கே.டீ.லால்காந்த இதன்போது தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

அரசு வறுமையையும் ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெஸ்ம ஒழிப்புத் திட்டம் ; ரவிகரன் குற்றச்சாட்டு

அரசு மக்களுக்கு வறுமையையும் ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெஸ்ம என்ற வறுமைஒழிப்புத் திட்டத்தையும் செயற்படுத்துகின்றது; ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு படையினர் மற்றும் அரசதிணைக்களங்கள் மக்களின் வாழ்வாதாரக் காணிகளை அபகரித்திருத்தல், சட்டவிரோத கடற்றொழில் மற்றும் இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த தவறுதல், இறுதிப்போரில் ஒப்படைக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கத்தவறுதல் உள்ளிட்ட செயற்பாடுகளின்மூலம் அரசானது மக்களுக்கு வறுமையை ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெஸ்ம என்ற நலன்புரி நன்மைகள் என்னும் வறுமை ஒழிப்புத் திட்டத்தை திட்டத்தை செயற்படுத்துவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே உண்ண உணவுக்கு மாற்றாக உணவைப் பயிரிட்ட மக்களின் வாழ்வாதார நிலங்களையும், குடியிருப்பு நிலங்களையும் விடுவிக்குமாறும், தரையிலும் கடலிலும் மக்களை தொழில் புரியக்கூடியவகையில் வழிவகைகளை ஏற்படுத்துமாறும், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் சிறையில் வாடும் உறவுகளை விடுவித்து அவர்கள் குடும்பங்களை ஆற்றுப்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வல்லைப்பாலத்தடியில் கார் கவிழ்ந்து விபத்து: தந்தை, தாய் மற்றும் மகள் படுகாயம் !

வல்லைப்பாலத்தடியில் கார் கவிழ்ந்து விபத்து: தந்தை, தாய் மற்றும் மகள் படுகாயம் ! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்றைய தினம்.மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், காரின் கட்டுப்பாட்டை இழந்த சாரதி, அதனை வீதியோரத்திலிருந்த பாலத்திற்குள் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதிவேகமாக வந்த கார், வல்லைப் பகுதியில் உள்ள பாலத்திற்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. இதன்போது கார் அங்கிருந்த சேற்றுக்குள் புதைந்த நிலையில், அதில் பயணித்தவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகிய மூவரும் பகாயமடைந்தனர். காயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விபத்துக்குள்ளான காரை மீட்டெடுக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யானை தாக்கி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் உயிரிழந்துள்ளார்

துணுக்காய், தேறாங்கண்டல் பகுதியில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். கடந்த  15 2026 அன்று இரவு, வயல் நிலங்களை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக காவலில் இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  உயிரிழந்தவர் தேறாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்  முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் இரவு வேளைகளில் வயல் காவலில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது யானைகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்தவும், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க