தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் வாள்களுடன் இளைஞன் கைது!

ஆபத்தான வாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியைச் சேர்ந்த 28வயதான இளைஞன் ஒருவர் நேற்றைய தினம். திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணப் காவல்துறையால்.கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு  காவல்துறையால்.கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இளைஞனை    இன்று. செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்தவிருப்பதாக  காவல்துறை.தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண  காவல்துறை.நிலைய தலைமைப் காவல்துறை. பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் வழிகாட்டுதலின் கீழ் பொறுப்பதிகாரி மஞ்சுள தலைமையிலான  காவல்துறை குழுவினரே மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment