சுழற்றியடித்த காற்றால் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்த மீனவர்கள்
புத்தளம் – உடப்பு கிராமத்தில் இன்று அதிகாலை தென்மேல் பருவக்காற்று திடீரென்று வீசியதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர்.
அதிகாலை வழமை போல மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகிய நிலையில் காற்றின் வேகம் காணப்படவே அவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்லாது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.
இதனால் இயந்திரப் படகுகள், தெப்பங்கள், கரைவலைத் தொழிலாளர்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

