சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

அன்னை பூபதி அவர்களின் அறப்போராட்டம் தொடங்கிய நாள்.

ஈழப் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி அவர்களின் அறப்போராட்டம் மிகவும் முக்கியமானது. 1988-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் தொடங்கினார். :இந்திய அமைதிப்படைக்கும் (IPKF) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடந்துகொண்டிருந்த சூழலில், பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்தப் போராட்டத்தை நடத்தினார்: உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும். விடுதலைப் புலிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தியாகப் பயணம் ஆரம்பம்: 1988 மார்ச் 19. காலம்: நீர் மட்டும் அருந்தி 32 நாட்கள் தொடர்ச்சியாகப் போராடினார். வீரச்சாவு: 1988 ஏப்ரல் 19 அன்று தனது போராட்ட இலட்சியத்திற்காக உயிர்நீத்தார்.மக்களுக்காகத் தாய் ஒருத்தி உயிர் கொடுத்தார்” என்ற பெருமைக்குரியவராக, ஈழத் தமிழ் மக்களின் இதயங்களில் ஒரு மாபெரும் அறப்போராளியாக அவர் இன்றும் நினைவு கூரப்படுகிறார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் வரும் ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்!

ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐ.நா பிரதிநிதிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தருவதாகவும், யாழ்ப்பாணம் வருகை தரும் குழுவினர் யாழில் பல தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஏப்பிரல் மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். யாழ்ப்பாணம் வருகை தரும் ஐரோப்பிய யூனியன் குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரூமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வடக்கில் பாட சாலைகளுக்குள் மத நூல்களை விநி யோகிக்கத் தடை – ‘ஆளுநரால் புதிய நடைமுறை

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாள்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாகப் புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, குறித்த விநியோகமானது றோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கேப்பாபிலவு மக்க ளின் காணிகளை விடுவிக்க வலியு றுத்திய ரவிகரன் அறிக்கை கோரியுள்ள ஜனாதிபதி செயலகம்

இராணுவத்தின் பிடியிலுள்ள கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி; காணிவிடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ள ஜனாதிபதி செயலகம் முல்லைத்தீவு – கேப்பாபிலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 14.01.2026அன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதி அனுர குமாரதிஸாநாயக்கவிற்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய, பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு கேப்பாபிலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை உடனடியாக தமக்கு அனுப்பி வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கடந்த 07.01.2026அன்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு –…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

அம்பலாந் தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் பயங்கர விபத்தில் நால்வர் உயிரிழப்பு.

அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறைனர்.  தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்தில் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறைனர்.  குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த பேருந்தும்  மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.இச் சம்பவம் தொடர்பில்  காவல்துறைனர்.மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி சந்தேகத்திற் கிடமான இடத்திற்கு நீதிபதி

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு இன்று நீதிபதி, சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர் . 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் படி இன்று (17) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்தினை பார்வையிட்டனர். இந்த குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இதன்போது குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம்கட்ட அகழ்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார். இப்புதைகுழி எதிர்வரும் 30 ஆம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி மூன்று பல்கலைக் கழக மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக  பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களிடம் வாக்குமூலம் சேகரிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் பல்கலைக்கழக பதிவாளர் எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கை சுதந்திர தினத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த இலங்கை தேசியக் கொடியை மாணவர்கள் சிலர் கீழே இறக்கி அதற்குப் பதிலாக கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர். இச்சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் மற்றும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

எரிபொருளுடனான மற்றொரு கப்பல் நாட்டுக்கு வந்துள்ளதாக மயூர நெத்திகுமாரகே!

எரிபொருளுடனான மற்றொரு கப்பல் நாட்டுக்கு வந்துள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.இந்த கப்பலில் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன்  பெட்ரோல்  மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல்  இருப்பதாகவும் அவர் கூறினார்.இவற்றை இறக்குவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், கேள்வி மனுக்கு அமைவாக ஏனைய அனைத்து எரிபொருள் கப்பல்களும் படிப்படியாக நாட்டை வந்தடையும் என்றும் அவர் கூறினார்.எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

தேவேந்திர முனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மீன்படி படகில் ஹேரோயின் போதைப் பொருள்

தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகில் ஹேரோயின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளது. குறித்த பலநாள் மீன்பிடி படகு இன்று (16) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். இந்நிலையில் குறித்த பலநாள் மீன்பிடி படகு கரைக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அதில் 123 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இதன் பெறுமதி சுமார் 3 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு முன்னரும் கடந்த வாரத்தில்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

ஈழத்தமிழன் ஒருவர் சுவிஸ் இராணுவ த்தின் முக்கிய அமைப்பில்..!

ஈழத்தமிழன் ஒருவர் சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில்..! புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) துணைத்தலைவராக ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiram Chandrelegar) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். ஜெனிவா மாநிலத்தில் பிறந்த ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம், தனது கடின உழைப்பாலும் திறமையாலும் சுவிஸ் இராணுவத்தின் உயரிய பொறுப்புகளில் ஒன்றை எட்டியுள்ளார். 2025-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய நிர்வாகக் குழுவில், லெப்டினன்ட் டேவிட் எம். வி. க்ரீமர் தலைவராகவும், லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்து இராணுவத்தின் மிக முக்கியமான அமைப்பான சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய துணைத்தலைவராக, ஈழத்தமிழ் பின்புலத்தைக் கொண்ட லெப்டினன்ட்…

மேலும் படிக்க