சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பாடசாலையின் முக்கிய நிகழ்வுக்கு அரசியல் கட்சி பிரமுகர் எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள்

கரவெட்டியில் நீண்ட வரலாற்று பாரம்பரியம் மிக்க பாடசாலையின் முக்கிய நிகழ்வுக்கு அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரை முதன்மை விருந்தினராக அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டு ஆரம்ப எதிர்பு காட்டப்படுள்ளது. பாடசாலையில் அரசியல் கலக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை. இதுவரை காலமும் இல்லாத ஒன்றை திணிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவே இந்த துண்டுப்பிரசுரங்களை நோக்க முடிகிறது. அரசியல்வாதிகளை தவிர்த்து பாடசாலை பழைய மாணவர்கள் அல்லது கல்வியியலாளர்கள் ஒருவரை அழைக்கவும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வெறுப்பு பேச்சுக் களை பேசும் தமிழ் மற்றும் அரசியல் வாதிகளுக்கு எதிராக போராட்டம்

வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்.!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 130 ரூபாவாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கிய அதே இராணுவத்திடம் எரிபொருளை நிரப்ப முடியாது;

இராணுவத்தின் படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கிய விவகாரங்களுக்காக நீதிகோரும் எம்மால், அதே இராணுவத்திடம் எரிபொருளை நிரப்ப முடியாது; நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ரவிகரன் எம்.பி கடிதம் இறுதிப் போர் காலப்பகுதியில் இராணுவப் பொறிமுறைக்குள் நம்பி ஒப்படைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பத்து ஆண்டுகளைக் கடந்து தேடிக்கொண்டும், இறுதிப்போரில் இதே இராணுவக்கட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான நீதிக்காகவும் நீதிக்கான சர்வதேச தலையீட்டுக்காகவும் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கும் தம்மால், இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலைங்களில் எரிபொருளை நிரப்ப முடியாதெனவும், மாற்று ஏற்பாட்டச் செய்யுமாறும் வலியுறுத்தி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு 22.03.2026இன்று கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவத்தினரால் நிருவகிக்கப்படும் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கப்படும் ஏற்பாடு குறித்து அண்மையில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் சரசாலை கனகம்புளியடி பகுதியில் வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு.

யாழ்.சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.இதன்போது முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளனர். அவர்களுள் தாயும் மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு சாரதியும், பிறிதொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையீல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் வட்டுக் கோட்டை பிரதேச வைத்திய சாலைக்கு முன்பாக, பொது மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்,

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் இன்றையதினம் அமைதியான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம், குறித்த வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன், பொதுமக்கள், நோயாளிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வைத்தியசாலையில் போதுமான கட்டட வசதிகள் இருந்தபோதிலும், தற்போது இரு வைத்தியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர் என்றும், ஒரு தாதியர் கூட நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், முன்பு 24 மணி நேர சேவை வழங்கப்பட்ட இந்த வைத்தியசாலை, தற்போது அந்த சேவையை இழந்துள்ளதாகவும், நோயாளர் விடுதி இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதேபோல், வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) காரைநகர் வைத்தியசாலைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதனால், வட்டுக்கோட்டை மற்றும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மாணவர் களுடன் தொடர்ந்து பயணிப் போம்.சட்டத் தரணி மணிவண்ணன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கிக் கறுப்புக் கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினைத் தெரிவித்து, அவர்களுடன் தொடர்ந்து பயணிப்போம் எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். கறுப்புக் கொடியேற்றப்பட்ட விடயம் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் சுமார் 5 மணி நேரம் வியாழக்கிழமை (19) விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளை, அவர்களுக்கான சட்டப் பிரதிநிதித்துவத்தை மூத்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் வழங்கி இருந்தார். மாணவர்கள் மீதான பொலிஸாரின் விசாரணைகள் முடிவுற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமான செயற்பாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களாகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அது அவர்களின் உணர்வுபூர்வமான விடயம். அது மாத்திரமின்றித் தமிழ் மக்களின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஏப்ரலில் நாட்டுக்கு வரும் எரிபொருள் கப்பல்கள்; மின்சாரம், போக்குவரத்துக்கு தடையில்லை! ஜனாதிபதி

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற அழிவுகரமான ஊழல்களுக்கு ‘உடனடி கொள்வனவு’ (Spot Purchases) முறையே பிரதான காரணமாக இருந்தது. இதனைத் தவிர்க்கவே, தாம் ஆட்சிக்கு வந்தது முதல் நீண்டகால விலைமனு மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலான (G2G) ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற நாடுகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் மற்றும் இந்திய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகத்தில் எவ்வித நெருக்கடியும் இல்லை, மசகு எண்ணெய் (Crude Oil) இறக்குமதியிலேயே சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது. புஜேரா (Fujairah) துறைமுகத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக, மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த 90,000…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பெரும் நெருக்கடி க்கு உள்ளாகி யுள்ள வடக்கு கடற்றொழி லாளர்கள் நா.வர்ணகுல சிங்கம்

உள்ளூர் இழுவைமடி மற்றும் எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களின் ரோலர்களால் தொடர்ந்தும் வடக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகண கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதியான நா.வர்ணகுலசிங்கம் குறிறம் சுமத்தியுள்ளார். அவர் நேற்று(20.03.2026) தனது இல்லத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் சகல தடை செய்யப்பட்ட கடற்றொழில்களும் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற போதும் யாழ்ப்பாணத்தில் நீதியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்துவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இந்திய இழுவை மடி படகுகள் உற்பத்தி இடங்களை அழித்து நாசம் செய்கின்ற போதும் அதை விட அதிகமாக தற்போது உள்ளூர் இழுவைமடி படகுகள் மீன் உற்பத்தி இடங்களை அழித்து உறப்பத்தியை இல்லாமல் செய்வதாகவும் குறிப்பட்டுள்ளார்.தற்போதும் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கடல் பகுதிகளில் சட்ட விரோத…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அர்ச்சுனாவிற்கு எதிராக கொடும்பாவி எரித்து போராட்டம்

கமக்கார அமைப்புக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக கொடும்பாவி எரித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25-02-2025 அன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் மீதும் ஏனைய கமக்காரர் அமைப்புக்கள் மீதும் ஊழல் இடம்பெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். குறித்த குற்றச்சாட்டை விசாரிக்க கோரி ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரிடம் மகஜர் கையளிக்கும் நோக்குடனும் விவசாயிகள் மீதான பொய்யான குற்றச்சாட்டை நிரூபிக்க வலியுறுத்தி இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன 28 அமைப்புக்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். காக்கா கடைச்சந்தியிலிருந்து ஆரம்பித்த போராட்டமானது பேரணியாக மாவட்ட செயலகம் வரை வந்து மாவட்ட அரசாங்கதிபரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்திருந்தனர். அதன்பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும்…

மேலும் படிக்க