சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்..!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்..! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் , இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.. அதனை அடுத்து இன்றைய தினம் புதன்கிழமை புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மயிலிட்டி காணி விடுவிப்புக்காக தொடரும் போராட்டம்

அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், கடந்த 36 ஆண்டுகளாகத் தங்களின் பூர்வீகக் காணிகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மயிலிட்டி மக்கள், அந்த நிலங்களை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்ந்தது. ​மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக்குழு மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்று வரும் இப்போராட்டத்தில், வலி வடக்கு வலையத்தைச் சேர்ந்த ஜே/248, ஜே/251, ஜே/246 மற்றும் ஜே/255 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். முன்பதாக யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள், இன்றுவரை வெவ்வேறு பிரதேசங்களில் அகதி வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். அதேநேரம் யுத்தம் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், தங்களின் சொந்த நிலங்கள் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருப்பது, வாழ்வாதாரத்தையும், பூர்வீகமாக வாழ்ந்த…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று ஆரம்பம்.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை (15) காலை ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நாளைய தினம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகி முதலாம் கட்ட அகழ்வு பணிகள் 09 நாட்கள் நடைபெற்றதில், 19 மனித எண்புக்கூடுகள் மீட்கப்பட்டன. அதனை அடுத்து இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரையிலான 45 நாட்கள் நடைபெற்ற…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்.

பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (வயது 88) இன்று காலமானார். தனது மந்திர குரலால் கோடிக்கணக்கான மனங்களை வசப்படுத்தியிருந்த அவர், இன்று காலமானார். ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 48,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். 1938ம் ஆண்டு ஆந்திராவின் பல்லேபட்லா கிராமத்தில் ஏப்ரல் 23 அன்று பிறந்தார். 19 வயதிலேயே இவர் சினிமா துறைக்குள் நுழைந்துவிட்டார். 1957ல் வெளியான ‘விதியின் விளையாட்டு’ என்கிற தமிழ் திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் இளையராஜா, எம்எஸ் விஸ்வநாதன் என முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து மறக்க முடியாத பாடல்களை கொடுத்திருக்கிறார். இவர் 4 முறை சிறந்த பின்னணி பாடகி என்று தேசிய விருதுகளை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தமிழ் மக்களி டமிருந்து ராஜபக்சக் கள் கொள்ளையடித்த நகைகளை மக்களு க்கு வழங்க வேண்டும்

தமிழ் மக்களிடமிருந்து ராஜபக்சக்களால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீண்டும் அவர்களிடம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,தமிழரசுக்கட்சி எம். பி எஸ். சிறீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவற்றில் ஊழல் நடந்துள்ளதால் இது தொடர்பில் விசாரணை செய்யாமல் விட முடியாது என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நகைகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக பட்டியலைக் கோரி அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்ட அவர்,எத்தனை ஆயிரம் பேர் நகைகளை அடகு வைத்துள்ளனர். அவ்வாறென்றால் எவ்வளவு கோடி ரூபா பெறுமதியான நகைகளை ராஜபக்‌ஷ அரசாங்கம் கொள்ளையடித்துள்ளது என்பதனை வெளிக்கொண்டு வாருங்கள் என்றும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கரும்புலிகள் நாள் ஜூலை 5-

கரும்புலிகள் நாள் ஜூலை 5- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5-ஆம் நாள் ஈழத் தமிழர்களால் கரும்புலிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொடைப் பிரிவான கரும்புலிகளின் முதல் தற்கொலைத் தாக்குதலை 1987-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம்  திகதி. கப்டன் மில்லர் (வல்லிபுரம் வசந்தன்)  நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவ முகாம் மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை மோதி முதன் முதலாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் நடந்த ஜூலை 5-ஆம் நாளை, விடுதலைப் புலிகள் இயக்கம் “கரும்புலிகள் நாள்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, ஆண்டு தோறும் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்களால் இந்நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் ஒன்பது நாளை எட்டியது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள குறித்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியே தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 59.5 ஏக்கர் காணிகள் பூர்வீக மக்களுக்குச் சொந்தமானவை என்றும், தற்போது அந்தப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ நிலைகளை அருகிலுள்ள மாற்று நிலங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறே தாங்கள் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தனர். தேசிய பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இராணுவ முகாம்களை மாற்றி அமைத்து, பூர்வீக மக்களின் காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைக்க…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ்ப்பாணம் செம்மணியில் 427 தீப்பந்தங்கள் ஏற்றி மக்கள் எழுச்சிப் போராட்டம்!

யாழ்ப்பாணம் செம்மணியில் 427 தீப்பந்தங்கள் ஏற்றி மக்கள் எழுச்சிப் போராட்டம்! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள அணையா விளக்கு திடல் பகுதியில், மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் “உரிமைப்பந்தம்” என்ற அமைதி வழி மக்கள் எழுச்சி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கடந்த காலங்களில் செம்மணி பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவாக இந்த விழிப்புணர்வுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில், செம்மணி அணையா விளக்கு தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உலகளவில் பேசப்பட்ட ஒன்றான நிலையில், அங்கு தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுடன், கடந்த 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகளின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி 

வவுனியாவில் ஆளுநருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்!

வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநருக்கு ஏதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்னால் இன்று குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அங்கிருந்து மன்னார் வீதி வழியாக ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நின்று கோசங்களையும் எழுப்பியிருந்தனர். வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிட்டப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் ”ஆளுநரே ஜனநாயக படுகொலையை நிறுத்து, ஜேவிபியின் முகவராக ஆளுநரே செயற்படாதே, பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காட்சிக்கு மாநகர சபையிடம் காணி உரிமம் உண்டா?, மக்கள் ஆணைக்கு மதிப்பளி, தையிட்டியில் பாராமுகம் மாநகர சபையில் பழிவாங்களா, ஊழல் அறிக்கையை…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி 

பலாலியில் இராணு வம் கையகப் படுத்திய காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் – பலாலியில் இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி, பிரதேச மக்கள் இன்று (28) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பலாலி உதயகலைவாணி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டம், காலை 8.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. தங்களது பூர்வீக நிலங்களை இழந்து 36 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், விரைவில் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்”, “எங்கள் நிலங்களை விடமாட்டோம்”, “நிலமே எங்கள் மூச்சு; அது இல்லையேல் வாழ்வு போச்சு”, “அரசே, இராணுவத்தை வெளியேற்று; மக்கள் குடியேற வழிவகை செய்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில்…

மேலும் படிக்க