சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

துவாரகா என கையெழுத்திடப்பட்ட. துண்டறிக்கை, வைரல்.!

தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் 03.06.2026

உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தொடர்பான அறிவிப்பு

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,

தமிழீழ மக்களின் பன்னாட்டு அரசியல், பொருளாதார, சமூக மற்றும் இராசதந்திர தேவைகளை முன்னிறுத்தி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) எனும் கட்டமைப்பு, 2009 ஆம் ஆண்டு வரை புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டு வந்தது. அதன் பின்னரும் சில நாடுகளில், குறிப்பாக சுவிசைத் தளமாகக் கொண்டு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது தலைமைச் செயலகத்தின் நெறிப்படுத்தலின் கீழ், அமைப்பு சார்ந்த கட்டமைப்புகளும் அரசியல் பணிகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற நேரடியான பெயரின் கீழ் மீளமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனுடன் தொடர்புடைய ஏனைய கட்டமைப்புகளும் தேசியத் தலைவரின் சீரிய சிந்தனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் செப்பனிடப்பட்டு வருகின்றன.

எனவே, தலைமைச் செயலகத்தின் பணிப்பின் அடிப்படையில், உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உலகளாவிய ரீதியில் இனிமேல் செயற்படாது என்பதை உத்தியோகபூர்வமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

(கையொப்பம்) 03.06.2026

துவாரகா பிரபாகரன் தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள்

அன்மைச் செய்தி

Leave a Comment