சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கடலில் தத்தளித்த தமிழக கடற் றொழிலாளர் மீட்பு

தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் இராமேஸ்வரம் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு நெடுந்தீவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 இதே நேரம் இன்று (23) மாலை 4.30 மணியளவில் குறித்த மீன்பிடியாளர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட நிலையில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நாளை (24) குறித்த தமிழக கடற்றொழிலாளரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் நெடுந்தீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment