இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இன, மத மோதல் களுக்கு இனி இட மில்லை.! – ஜனாதிபதி

இலங்கையில் மீண்டும் எந்தவொரு இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற 42ஆவது தேசிய மீலாதுன் விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இடம்பெற்ற இன மோதல்களால் இலங்கை பாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளதாகவும், அந்தக் கொடூரமான அனுபவங்களின் பாதிப்பை இன்றைய தலைமுறையினரும் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, நாட்டில் மீண்டும் எந்தவொரு இன மோதலும் உருவாகுவதற்கு இடமளிக்கப்படாது என அவர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டின் நீதித்துறை தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர், நீண்டகாலமாக வழக்குகள் முடிவுக்கு வராமல் இருப்பதால் மக்கள் நீதியின் மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் 1ஆவது சேவைக்கு BIA இல் உற்சாக வரவேற்பு

இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் 1ஆவது சேவைக்கு BIA இல் உற்சாக வரவேற்பு – வாரத்திற்கு 3 சேவைகள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கிய ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways) நிறுவனத்தின் முதலாவது விமானம் நேற்று (25) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது. இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் புதிய விமான சேவையின் ஆரம்பத்தை முன்னிட்டு, விமான நிலையத்தில் விசேட நீர் பீச்சி வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இலங்கையின் பாரம்பரிய கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கண்டிய நடனக் கலைஞர்களின் சிறப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருள் விநியோகbத்திற்கு. தொடர்ந்தும் QR

மத்திய கிழக்கு மோதல் இன்னமும் முடிவுக்கு வராததால் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறையை அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். “மேற்கு ஆசியாவில் தொடரும் நெருக்கடிகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நிச்சயமற்ற தன்மை என்பன உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் விநியோகத்தில் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கு QR முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். QR முறைமை மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் நடைமுறையில் இருந்த போதிலும், எரிபொருள் நுகர்வானது சிறிய அளவிலேயே வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய, டீசல் பாவனை சுமார் 10 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

டுபாயில் சிக்கிய ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான “பஸ் லலித்” எனப்படும் லலித் கன்னங்கர என்பவர், மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ‘பஸ் லலித்’ இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். டுபாய் பாதுகாப்புப் படையினரால் கடந்த நாட்களில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ மீது மனிதக்கொலை, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கட்டுநாயக்கவில் ஒரு கோடி பயணிகளை கையாளத் திட்டம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் ஒரு கோடி பயணிகளை கையாளும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.முதலாவது முனையத்தில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பல்வேறு விரிவாக்கத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”36 பயணிகள் பதிவு (Check-in) கவுண்டர்கள் மற்றும் முழுமையாக வசதிப்படுத்தப்பட்ட புதிய லொபி பகுதியை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முனையம் ஒன்றின் திறனை அதிகரிப்பதற்காக மேலும் நான்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த அனைத்துத் திட்டங்களும் ஒரு வருடத்துக்குள் நிறைவுசெய்யப்படும். இதன் மூலம் முனையம் ஒன்றில் பயணிகள் கையாளும் திறன் அடுத்த ஆண்டு, ஒரு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

SLS போலி தரச்சான்றுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்

போலியாக இலங்கை தரச்சான்று முத்திரையை (SLS) பயன்படுத்தி சந்தைக்கு விநியோகிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை, நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.அவிசாவளைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையிலே,இந்த போத்தல்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அமிதிரிகல, ருவான்வெல்ல பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இந்தச் சுத்திகரிக்கப்படாத குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு, அவிசாவளையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அங்கு 500 மில்லிலீற்றர் முதல் 19 லீற்றர் வரையிலான பல்வேறு அளவிலான போத்தல்களில் போலியான SLS முத்திரை மற்றும் ‘894’ என்ற சான்றிதழ் இலக்கம் அச்சிடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட இந்த 8,500 போத்தல்களும் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு பொறுப்பேற்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறான போலி உற்பத்தியாளர்கள் செலவுகளைக்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்த ஆண்டில் இதுவரை 1,654 ஆபத்தான வாகன விபத்துகள் – 1,749 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் நேற்று (20) வரை நாட்டில் 1,654 ஆபத்தான வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். குறித்த விபத்துகளில் 1,749 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாரிய விபத்துகளில் 4,556 பேரும், சிறிய விபத்துகளில் 7,295 பேரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்துகளால் 3,232 சொத்து சேதங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீதி விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 576 பேர் பாதசாரிகள், 617 பேர் மோட்டார் சைக்கிள் சாரதிகள், 122 பேர் பின்னிருக்கை பயணிகள், 119 பேர் மிதிவண்டி சாரதிகள், 139 பேர் சாரதிகள் மற்றும் 173 பேர் பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அரிசி இறக்குமதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 2026ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசுக்குத்  தேவையான 7 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் நேற்று  பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 76 ஆண்டு கால விவசாயிகளின் சோகத்தைச் சுபீட்சமான நிலைக்கு மாற்றித் தருவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் ஜீவனோபாயத்தைப் பொருளாதாரப் படுகொலையாக மாற்றியுள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார். அரசின் அமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட தரவுகளின்படி, சிவப்பு நாடு மற்றும் வெள்ளை நாடு போன்றவற்றுக்கான உற்பத்திச் செலவைக் கணக்கிடும் போது, விவசாயிகளுக்குக் கிடைக்கும் குறைந்த இலாபத்தைக் கொண்டு எவ்வாறு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் தொடரும் வறட்சி: கடும் நீர் நெருக்கடியில் 25,563 குடும்பங்கள்!

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி நிலைமையால் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 25,563 குடும்பங்களின் 81,605 பேர் கடுமையான நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் தெரிவித்துள்ளது. அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் வறட்சியான வானிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ நிகழ்வுகளால் உருவாகக்கூடிய வறட்சி நிலைமைகளை எதிர்கொள்வதற்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடையின்றி நீர் வழங்குவதற்கும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பாதுகாப்பு அமைச்சினால் கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதி சிறப்புச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்காக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், போத்தல் குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்காக ஒருவருக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் நீரின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

நாடு திரும்பும் அகதிகளின் பிரச்சினைகளை ஒரே பொறிமுறையில் தீர்க்க வேண்டும்

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளின் பிரச்சினைகளை ஒரே பொறிமுறையில் நீக்குவதற்கு வடக்கு, கிழக்கில் ‘ஒருங்கிணைந்த மீள் வருகை மற்றும் மறுவாழ்வு அலகு’ ஒன்றை நிறுவ வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2 இல் விசேட கூற்றொன்றை முன்வைத்தே அவர், இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; இந்தியாவிலுள்ள எமது மக்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது சனத்தொகை வீதம் குறைவடைந்து வருகிறது.இந்நிலையில் அவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்தால் எமது சனத்தொகை விகிதாசாரம் அதிகரிக்கும், பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் அதிகரிக்கும்.இவ்வாறு வரும் பட்சத்தில்,இராணுவத்தின் வசமுள்ள இவர்களின் காணிகளையும் விடுவிக்க முடியும்.இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப விரும்புவது தொடர்பாக, குறிப்பாக பாதுகாப்பு அனுமதி, வீடமைப்பு,காணி மற்றும்…

மேலும் படிக்க