அண்மை செய்தி தாயகச் செய்தி 

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்தவேலைகளைத் துரிதப்படுத்துமாறு ரவிகரன்

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்தவேலைகளைத் துரிதப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து

விஜயரத்தினம் சரவணன்

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்த வேலைகளைத் துரிதப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற ஊறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் மத்திய அரசிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி கிடைத்தவுடன் பாடசாலைகளின் திருத்த வேலைகள் விரைவாக அரம்பிக்கப்படுமெனவும் வடக்குமாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் பதிலளித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தித்வா புயலினால் முல்லைத்தீவு கல்விவலயத்தில் 32பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகளிலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது.

அதில் 09பாடசாலைகளின் திருத்த வேலைகள் 2025இல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்தோடு இந்த ஆண்டில் 15பாடசாலைகள் திருத்த வேலைகளுக்காக உள்ளீர்க்கப்பட்டிருந்தன. அதாவது சிறு திருத்த வேலைகளுக்காக  ஒதுக்கப்பட்ட நிதியில்தான் அந்த 15பாடசாலைகளிலும் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்த திருத்த வேலைகளுக்கு மேலதிக நிதிகளும் வழங்கப்படவில்லை.

அதேவேளை முல்லைக் கல்வி வலயத்தில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 08பாடசாலைகளுக்கான திருத்தவேலைகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை.

குறிப்பாக முறிப்பு தமிழ் வித்தியாலயம், மந்துவில் அரசரட்ணம் வித்தியாலயம், கொகிளாய் அ.த.க பாடசாலை, முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலை, புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்குவித்தியாலயம், இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், சுதந்திரபுரம் தமிழ் வித்தியாலயம், கோம்பாவில் விக்கினேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கே இதுவரை திருத்த வேலைகளுக்காக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான திருத்த வேலைகளுக்கு எப்போது நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுமென அறிய விரும்புகின்றேன். எனவே உரிய தரப்பினர் இதற்குரிய பதிலை வழங்க வேண்டும் – என்றார்.

இந்நிலையில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்களை, தாம் மத்திய அரசிற்கு அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிவித்த வடக்குமாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் அதற்கான நிதி கிடைத்தவுடன் பாடசாலைகளின் திருத்த வேலைகள் அரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

அன்மைச் செய்தி

Leave a Comment