செம்மணியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி வழக்கு
செம்மணியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி வழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சார்பில் விண்ணப்பம் செம்மணி சித்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான கட்டளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (06) வழங்கப்படவுள்ளது. செம்மணி – சித்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளில் நேற்று (03) வரையில் 7 மனித மண்டையோடுகள் உள்ளிட்ட மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் 3 மனித எலும்பு கூட்டு எச்சங்களுக்கு மேல் அடையாளம் காணப்பட்டால் அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அப்பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ். நீதவான் நீதிமன்றில் நேற்று காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சார்பில் சட்டத்தரணிகள் விண்ணப்பம்…
மேலும் படிக்க